யாழ் சமையல்

Subscribe:

Saturday 9 February 2013

கண்வலி தைலம் - கரிசலாங்கண்ணி , கீழாநெல்லி , பொன்னாங்கண்ணி

கரிசலாங்கண்ணி

அறிகுறிகள்:
  • கண் வலி.
  • கண் எரிச்சல்.
  • மங்கலான பார்வை.
தேவையான பொருள்கள்:
  1. கரிசலாங்கண்ணி சாறு
  2. பொன்னாங்கண்ணி சாறு
  3. கீழாநெல்லி சாறு
  4. சோற்றுக்கற்றாழை
  5. எள் எண்ணெய்
  6. விளக்கெண்ணெய்
  7. நெய்.
  8. வெள்ளை மிளகு
  9. சந்தனக்கட்டை
  10. வெட்டி வேர்
  11. பசும்பால்
  12. இளநீர்
செய்முறை:
  • கரிசலாங்கண்ணியை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி ஆகியவற்றின் வேரை நீக்கி அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
  • சோற்றுக்கற்றாழை தோல் நீக்கி சோற்றை மட்டும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  • ஒரு மண் பானையில் எள் எண்ணெயை ஊற்றி சூடேறியதும் விளக்கெண்ணெய் ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு அனைத்து சாறுகளையும் ஊற்றி மூடி வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எடுத்து ஆற வைக்க வேண்டும்.
  • பிறகு வெள்ளை மிளகை உடைத்து 200 மி.லி பசும்பாலில் 1 மணி நேரம் ஊற வைத்து அதே பாலை கொண்டு மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.
  • சந்தனக்கட்டையை  மாவாக இடித்து 200 மி.லி இளநீரில் 2 மணி நேரம் ஊற வைத்து மை போல அரைத்து தைல பானையில் போட வேண்டும்.
  • வெட்டி வேரை இடித்து தைல பானையில் போட வேண்டும்.
தைல பானையை மீண்டும் சிறு தீயில் காய்ச்சி தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி கொள்ள வேண்டும்.

உபயோகிக்கும் முறை:
  • காலையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்து வர வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் வலி, கண் எரிச்சல், மங்கலான பார்வை ஆகியவை குறையும்.
குறிப்பு:
  • இந்த தைலத்தை தேய்த்து வரும் நாட்களில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும். தயிர், இளநீர், குளிர்பானங்கள், பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.
கற்றாழை[

No comments:

Post a Comment

Flag Counter