யாழ் சமையல்

Subscribe:

Wednesday 20 February 2013

வாய் துர்நாற்றம் குறைய- மணத்தக்காளி , ஏல அரிசி, வெங்காயம்

மணத்தக்காளிஏல அரிசி 
தேவையான பொருட்கள்:
  1. மணத்தக்காளிக் கீரை – ஒரு கைப்பிடி
  2. வெங்காயம் – ஒரு ரூபாய் எடை
  3. வெந்தயம்- இரண்டு எடை
  4. ஏல அரிசி – ஐந்து காசு எடை
செய்முறை:
  • மணத்தக்காளிக் கீரையை ஒரு சட்டியில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும். இந்தக் கீரையை நனறாக வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
  • வெந்தயம், ஏல அரிசி ஆகியவற்றை நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும்.
  • இப்போது வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். இதனை மேலே சொன்ன கலவையிலே போடவேண்டும்.
  • வெங்காயம் சிவந்து வரும் வேளையில் தனியே வதக்கி எடுத்து வைத்திருக்கக் கூடிய மணத்தக்காளிக் கீரையுடன் போட வேண்டும்.
  • இப்பொழுது எல்லாவற்றையும் ஒனறாக கலந்து கிளற வேண்டும். இதில் இரண்டு ஆழாக்குத் தண்ணீரை விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் நன்கு சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்தக் கஷாயத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
  • காலை, மதியம், மாலை என ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும்.
தீரும் நோய்கள்:
  • வாய் துர்நாற்றம்.

No comments:

Post a Comment

Flag Counter