யாழ் சமையல்

Subscribe:

Sunday, 10 February 2013

சளி குறைய‌ - வெண்துளசி , அதிமதுரம் , கருந்துளசி

வெண்துளசிஅதிமதுரம்கருந்துளசி 
அறிகுறிகள்:
 • சளி.
தேவையான பொருள்கள்:
 1. வெண் துளசி
 2. கருந்துளசி
 3. அதிமதுரம்
 4. மிளகு
 5. சீரகம்
 6. கோஷ்டம்.
 7. பசும்பால்
செய்முறை:
 • வெண்துளசியையும், கருந்துளசியையும் பச்சையாக எடுத்து அரைத்து கொள்ளவும்.
 • மிளகை ஒன்றிரண்டாக உடைத்து இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும்.
 • அதிமதுரத்தை இடித்து இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும்.
 • சீரகத்தை தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தி இதையும் இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து கொள்ளவும்.
 • கோஷ்டத்தை எடுத்து ஒன்றிரண்டாக உடைத்து போட்டு பசும்பால் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
 • அரைத்த துளசிகளையும், சலித்து வைத்த அனைத்து பொடிகளையும் ஒவ்வொன்றாக போட்டு வெந்நீரை சிறுக சிறுக விட்டு நன்கு அரைக்கவும். பிறகு அரைத்ததை உருண்டைகளாக உருட்டி நிழலில் வைத்து நன்றாக காயும் வரை உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
இந்த உருண்டையில் காலை 1 உருண்டை, மதியம் 1 உருண்டை மற்றும் மாலை 1 உருண்டை என 3 வேளை 3 நாட்கள் வெந்நீருடன் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

குறிப்பு:
 • குளிர்ந்த பானங்கள், தயிர், இளநீர்,குளிர்ந்த தண்ணீர் குளியல் ஆகியவற்றை தவிர்க்கவும்.

No comments:

Post a Comment