யாழ் சமையல்

Subscribe:

Saturday 16 February 2013

நேத்திர நோய்களுக்கு தைலம்- செண்பகப் பூ , செஞ்சந்தனம் ,கோஷ்டம்

செண்பகப் பூசெஞ்சந்தனம்கோஷ்டம் 
தேவையான பொருட்கள்:
  1. பொன்னாங்கண்ணி -1 கிலோ
  2. சிறுகீரை -1 கிலோ
  3. ஆவாரைமொட்டுத் தளிர் -1 கிலோ
  4. ஆவின் பால் – 1 லிட்டர்
  5. சிற்றாமணக்கு எண்ணெய்- 1 லிட்டர்
  6. ஆவின் நெய் (பசு நெய்) – 1 லிட்டர்
  7. நல்லெண்ணெய்- 1 லிட்டர்
  8. ஏலம்  – 10 கிராம்
  9. கிராம்பு – 10 கிராம்
  10. அதிமதுரம்  – 10 கிராம்
  11. செண்பகப் பூ  - 10 கிராம்
  12. சாதிக்காய்  – 10 கிராம்
  13. மிளகு  – 10 கிராம்
  14. சந்தனம்  – 10 கிராம்
  15. செஞ்சந்தனம்  – 10 கிராம்
  16. மரமஞ்சள்  – 10 கிராம்
  17. வெட்டிவேர்  – 10 கிராம்
  18. கோஷ்டம்  - 10 கிராம்
செய்முறை:
  • பொன்னாங்கண்ணி, சிறுகீரை, ஆவாரை மொட்டுத் துளிர் இவைகளை மர உரலில் போட்டு சிறுக சிறுக பசும் பாலை ஊற்றி இடித்து துணியில் வைத்து சாறு பிழிந்து ஒரு லிட்டர் அளந்து மண்பானையில் ஊற்றி பசுவின் பால், சிற்றாமணக்கு எண்ணெய், பசும் நெய், நல்லெண்ணெய் இவைகளையும் அதோடு ஊற்றி விறகடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு மணி நேரம் எரித்துக் கொள்ளவேண்டும்.
  • ஏலம், கிராம்பு, அதிமதுரம், செண்பகப் பூ, சாதிக்காய், மிளகு, சந்தனம், செஞ்சந்தனம், மரமஞ்சள், வெட்டிவேர், கோஷ்டம் இவைகளை நன்றாகப் பொடித்து தைலப் பானையில் போட்டு தைல பதம் வரும் வரையில் எரித்து இறக்கவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
  • ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெந்நீரில் தலை முழுகவேண்டும். தலை முழுக்கன்று குளிர்ந்த பானம், பதார்த்தங்களையும் கண்டிப்பாக நீக்க வேண்டும்.
தீரும் நோய்கள்:
  • கண்புகைச்சல், கண்ணில் ஏற்படும் நோய்கள் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter