யாழ் சமையல்

Subscribe:

Monday, 4 March 2013

கரும்புச்சாறு

கரும்பு   கரும்புச்சாறு

நமது நாட்டின் அரிசி, கோதுமை அடுத்து கரும்பு மிகவும் அதிகமாக உற்பத்தியாகிறது. வடநாடுகளில் கரும்புச்சாறை அதிகம் பருகுகின்றனர். தமிழ் நாட்டில் இதன் பயன்பாடு பெருக வேண்டும்.

இதிலிருந்து பெறப்படும் வெள்ளைச் சீனியால், பலவகை இனிப்புகளால் நீரிழிவு நோய்கள் பெருகிவிட்டன. எனவே அன்பர்கள் வெள்ளைச் சீனியைத் தவிர்த்து அதற்க்கு பதிலாக கரும்புச்சாறு, பேரீட்சை, தேன், நாட்டு வெல்லம் தாராளமாக பயன்படுத்தலாம்.


கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்:
 1. நீர்=90%
 2. மாவுப்பொருள்=9%
 3. புரோட்டின்=0.3%
 4. கொழுப்பு=0.2%
 5. கால்சியம்=6 யூனிட்
 6. இரும்புத் தாது=2 யூனிட்
 7. வைட்டமின் B1=0.02 யூனிட்
 8. வைட்டமின் B3=0.02 யூனிட்
 9. வைட்டமின் C=10 யூனிட்
 10. பாஸ்பரஸ்=10 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கரும்புச்சாறில் உள்ள சத்துக்கள்.

மருத்துவக் குணங்கள்:
 • உடலுக்கு தேவையான மாவுச்சத்து, இனிப்புக் கிடைக்கிறது. புத்துணர்வு தந்து உடலின் நீர் சத்தை காக்கிறது.
 • காமாலை வராமல் தடுக்கிறது.
 • சிறுநீரகப் பிணிகள் விலகி நலம் கிட்டும். மலச்சிக்கல் தீரும்.
 • அதிக வெப்பசக்தி தரவல்லது.
 • உடல் பருமன், தொப்பை குறையும். காபி, டீக்கு மாற்றாக தினமும் சாப்பிடலாம்.
கச்சிதமான உடலுக்கு தினமும் கரும்புச்சாறு அருந்தலாம்.


மருத்துவக் குணங்கள்:
 1. சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனற்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
 2. இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
 3. இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
 4. இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
 5. கரும்பின் சாற்றைக் காயச்சி சர்க்கரை செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
 6. இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
 7. சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
 8. மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம்.
 9. சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம்.
 10. செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகிறது.
 11. ஆறாத புண்களையும் குணமாக்க வழங்கப்படுகிறது.
 12. மஞ்சள் பெழுகும், சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவி வந்தால் குணமாகிறது.
 13. கண்களில் தூசு, வலி, இரணம், நோய் ஆகியவற்றிற்கு சர்க்கரை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து கரைத்து ஒரு மணி நேரத்துக்கு 2 சொட்டு கண்களில் விட்டுவந்தால் நோயின் தாக்கம் குறையும்.
 14. மேலும், இவற்றிற்கு இரவில் கண் இமைகளுக்கு சிற்றாமணக்கு நெய், ஓரங்களில் தேய்த்து, கண் இமை ஒட்டிக் கொள்ளாதபடி செய்வதுடன், காலையில் வெதுவெதுப்பான பாலும், நீரும் சேர்த்து கண்களைக் கழுவி வரவேண்டும்.
 15. நெடுநாள் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் சர்க்கரையை போட்டு புகையை ஏற்படுத்தினால் சுத்தமான காற்று ஏற்பட்டு அறை சுத்தமாகும்.
 16. கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது காடி என அழைப்பர். இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். காடி ஒரு பங்கும், சுத்தமான நீர் 5 பங்கும் கலந்து ஈயம் போன்ற விஷங்களால் ஏற்படும் நோய்களுக்குத் தரலாம். இதற்கு முன்பு பேதிக்கு கொடுத்து அதன்பின் கையாள்வது நல்லது.
 17. தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு இதன் ஆவியை நுகர வைத்தால் குணமேற்படும்.
 18. சிறுநீரில் இரத்தம் வெளியேறும் நோய்க்கு, காடியை தொடை, இடுக்கு ஆகிய இடங்களில் பூசினால் குணமாகும்.
 19. தேள், குளவி, தேனீ போன்றவை கொட்டினாலும், சில பயிர் பொருட்களின் உராய்வலால் ஏற்படும் தினவு, நமைச்சல் நோய்களுக்குப் பூசலாம். இதனைப் போன்றே மார்பக வீக்கத்தையும் கரைக்கலாம்.
 20. கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
 21. இதனை சரிபாதியாகப் பிளந்து திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி இவற்றை நடுவாக வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, பின்னர் சீலையை எடுத்து பின் பிழிந்து எடுத்த சாற்றினை விக்கலுக்குக் கொடுத்து வந்தால் தீரும். இதனைப் பல துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட செம்புத்தூளை சட்டியிலிட்டு வறுத்து வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகை பஸ்பம் உண்டாகும்.
 22. இதனைச் செய்ய ஒரு பலம் செம்பு தூளுக்கு 4 கரும்புகள் கூட தேவையாகும். இதனைக் கொண்டு பல நோய்களைத் தக்க இணை மருந்துகளால் தீர்க்கலாம்.
 23. இது யாவரும் அறிந்த பிரபலமான ஒரு பொருளாகும். இது இரண்டு வகைப்படும். இதன் சாற்றிலிருந்து வெல்லம், சர்க்கரை, இனிப்பு மிட்டாய்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு சிறந்தவகை ‘ப்போண்டா’ ஆகும். இது சாப்பிடுவதற்கு இனிப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
 24. இதயத்திற்கு இன்பமளிக்கிறது. வயிற்றிலுள்ள அசுத்தத்தை வெளியேற்றுகிறது. சிறுநீரைப் பிரியச் செய்கிறது. உடலுக்குச் சக்தியும், பருமனும் அளிக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
 25. இதை அனைவரும் உரித்து சுவைத்துச் சாப்பிடுவார்கள். இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தியும், பருமனும் கிடைக்கிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றும் தன்மை உடையதால், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலைத் தணிக்கிறது.
 26. கரும்பை உரித்துத் துண்டு துண்டாக்கி பனியில் வைத்து விட வேண்டும். காலையில் இத்துண்டுகளைச் சாப்பிட்டால், சிறுநீர் கழிவதில் எரிச்சல், வெட்டை நோய் குணம்பெறுகிறது. சில நேரங்களில் சிறுநீரை அதிகளவில் வெளியேற்றும் தன்மையுடையதால் சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றுகிறது.§

No comments:

Post a Comment