யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label முகம். Show all posts
Showing posts with label முகம். Show all posts

Thursday, 28 March 2013

முகத்தில் சுருக்கம் - கசகசா. தயிர்.

வெள்ளை கசகசா 
அறிகுறிகள்:
  1. முகத்தில் சுருக்கம்.
  2. முகத்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. கசகசா.
  2. தயிர்.
செய்முறை:
  1. 2 தேக்கரண்டி கசகசாவை எடுத்து நன்றாக அரைக்க வேண்டும்.
  2. 1/2 கப் தயிரை எடுக்க வேண்டும்.
  3. கசகசாவுடன் தயிரை நன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்புடன் காணப்படும்.

மேனி சிவப்பாக - செம்பருத்தி பூ. தண்ணீர்.

செம்பருத்தி பூ
அறிகுறிகள்:
  1. பளப்பளப்பு இழந்து காணபடுதல்.
  2. முகம் சுருக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. செம்பருத்தி பூ.
  2. தண்ணீர்.
செய்முறை:
சிறிது செம்பருத்தி பூவை எடுத்து அதை அரை மணி நேரம் ஊறவைத்து  பின்பு அதை தண்ணீருடன் சேர்த்து நன்றாக மைய அரைத்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் மேனி பளப்பளப்புடன் காணப்படும்.

மேனி பளப்பளப்பாக - வெள்ளரிக்காய். மஞ்சள். வேப்பம் பூ.

வெங்காயம்
அறிகுறிகள்:
  1. உலர்ந்த மேனி.
  2. முகத்தில் கருப்பாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. வெள்ளரிக்காய்.
  2. மஞ்சள்.
  3. வேப்பம் பூ.
  4. வெங்காயம்.
  5. தயிர்.
செய்முறை:
சிறிதளவு வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ, வெங்காயம், மற்றும் தயிர் இவைகளை உணவிலோ அல்லது தனியாகவும் சாப்பிட்டு வந்தால் மேனி பளப்பளப்புடன் காணப்படும்.

முகம் அழகு பெற - துளசி.

துளசி
அறிகுறிகள்:
  1. முகம் வறண்டு இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. துளசி.
செய்முறை:
துளசி இலையை முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகு பெறும்.

முகம் நிறம் மாற - முருங்கை வேர். துளசி வேர். பால்.

முருங்கை
தேவையான பொருட்கள்:
  1. முருங்கை வேர்.
  2. துளசி வேர்.
  3. பால்.
செய்முறை:
முருங்கை வேர், துளசி வேர்அரைத்து பாலில் கலந்து பூசி குளித்து வந்தால் முகம் நிறம் மாறும்

முகம் பளபளப்பாக - வாழைபழம். ஆலிவ் ஆயில்.

ஆலிவ் ஆயில்
தேவையான பொருட்கள்:
  1. வாழைபழம்.
  2. ஆலிவ் ஆயில்.
செய்முறை:
நன்றாக பழுத்த வாழைபழத்தை எடுத்து ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்

முகப்பொலிவு உண்டாக - கரிசலாங்கண்ணி. நெய்.

கரிசலாங்கண்ணி
தேவையான பொருட்கள்:
  1. கரிசலாங்கண்ணி.
  2. நெய்.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும்.  இதை  கண் மை ஆக உபயோகிக்க இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும்.

முகம் பொலிவுற - அறுகம்புல். வெண்ணெய்.

அறுகம்புல்
தேவையான பொருட்கள்:
  1. அறுகம்புல்.
  2. வெண்ணெய்.
செய்முறை:
கணுநீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கிராம் எடுத்து வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் சாப்பிட  முகம்  பொலிவு  பெறும்.

முகப்பொலிவு பெற - எலுமிச்சை. சந்தனம்.

சந்தன கட்டை 
தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சை.
  2. சந்தனம்.
செய்முறை:
சிறிதளவு எலுமிச்சை சாறில் சந்தன கட்டையை உரைத்து சந்தன குழம்பு எடுத்து  முகத்தில் பூச முகம் பொலிவு பெறும்.

முகம் பொலிவுற - கஸ்தூரி மஞ்சள். விரலிமஞ்சள். சோற்றுக் கற்றாழை.

சோற்றுக் கற்றாழை
தேவைப்படும் பொருடகள்:
  1. கஸ்தூரி மஞ்சள்.
  2. விரலிமஞ்சள்.
  3. சோற்றுக் கற்றாழை.
செய்முறை:
கஸ்தூரி மஞ்சள்,விரலிமஞ்சள்,சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவ முகம் பொலிவுறும்.

முகம் பொலிவு பெற - வாழைப்பழம். பால். தேன்.

வாழைப்பழம்
தேவையான பொருட்கள் :
  1. வாழைப்பழம்.
  2. பால்.
  3. தேன்.
செய்முறை:
வாழைப்பழத்தை மசித்து  அரை ஸ்பூன் பால், சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

Wednesday, 27 March 2013

முகஅழகு கூட - தயிர். சமையல் சோடா.

தயிர்
தேவையான பொருட்கள் :
  1. தயிர்.
  2. சமையல் சோடா.
செய்முறை:
தயிருடன் சிறிதளவு சமையல் சோடா கலந்து முகத்தில் தடவ முகத்தின் அழகு கூடும். முகத்தில் அழுக்கு வெளிவரும்.

முகம் பளபளப்பாக - பன்னீர் ரோஜா. வசம்பு. கஸ்தூரி மஞ்சள்.

பன்னீர் ரோஜா
தேவையான பொருட்கள் :
  1. பன்னீர் ரோஜா.
  2. வசம்பு.
  3. கஸ்தூரி மஞ்சள்.
  4. புனுகு பட்டை.
  5. கடலைபருப்பு.
  6. பாசிபருப்பு.
  7. பூலங்கிழங்கு.
செய்முறை:
பன்னீர் ரோஜா 200 கிராம், வசம்பு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 200கிராம், புனுகு பட்டை 50 கிராம், கடலை பருப்பு 100 கிராம், பாசிபருப்பு 100 கிராம்,மற்றும் பூலங்கிழங்கு 100 கிராம் இவைக‌ளை பொடி செய்து உபயோகித்தால் முகம் பளபளக்கும்.

முகம் பிரகாசமாக - கடலைமாவு. தேன். பால். பன்னீர்.

கடலை மாவு
தேவையான பொருட்கள் :
  1. கடலைமாவு.
  2. தேன்.
  3. பால்.
  4. பன்னீர்.
செய்முறை:
கடலைமாவு ,தேன், பால் , பன்னீர் ஆகியவற்றை சேர்த்து 15 நிமிடம் முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் முகம் பிரகாசமாகும்.

முகம் பளபளப்பாக - கேரட்.

கேரட்
தேவையான பொருட்கள்:
  1. கேரட்.
செய்முறை :
கேரட்டை  நீரில் நன்கு கொதிக்க வைத்து அந்த  சாறினை ஆறிய பிறகு முகத்தில் தேய்த்துக் குளித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

முகப்பொலிவு உண்டாக - முளைக்கீரை. முந்திரிப்பருப்பு. மஞ்சள்.

முளைக்கீரை
அறிகுறிகள் :
  1. முகத்தில்  தேமல்.
  2. முகப்பரு.
தேவையானப் பொருட்கள்:
  1. முளைக்கீரை.
  2. முந்திரிப்பருப்பு.
  3. மஞ்சள்.
செய்முறை :
முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.

முகம் பளபளக்க - வாழைப்ப‌ழ‌ம். மஞ்சள். க‌ட‌லை மாவு.

மஞ்சள்
தேவையான பொருட்கள்:
  1. வாழைப்ப‌ழ‌ம்.
  2. மஞ்சள்.
  3. க‌ட‌லை மாவு.
செய்முறை:
நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தில் சிறிது மஞ்சள் பொடியையும், கடலை மாவையும் கலந்து நன்கு குழைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் இளம் வென்னீரில் கழுவி வர, முகம் பளபளக்கும்.

முகம் பளபளக்க - வெண்டைக்காய்

வெண்டைக்காய்
தேவையான பொருட்கள்:
  1. வெண்டைக்காய்
செய்முறை:
வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வ்ந்தால், முகம் பளபளக்கும்.

முகத்தில் பரு, கட்டி வராமல் தடுக்க - காசினிக் கீரை.

காசினிக் கீரை
தேவையான பொருட்கள் :
  1. காசினிக் கீரை.
செய்முறை :
காசினிக் கீரை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் முகத்தில் பரு, கட்டி போன்றவை வராமல் தடுக்கலாம்.

க‌ருவளையம் குறைய - சோற்றுக்கற்றாழை இலை. பப்பாளி.

சோற்றுக்கற்றாழை
அறிகுறிகள்:
  • கண்ணுக்கு கீழ் கருவளையம்.
  • கன்னத்தில் கருமை படர்தல்.
  • கன்னத்தில் கருந்திட்டு.
தேவையான பொருட்கள்:
  1. சோற்றுக்கற்றாழை இலை.
  2. பப்பாளி.
செய்முறை:
சோற்றுக்கற்றாழை இலையுடன் பப்பாளி கூழ் ஒரு டீஸ்பூன் கலந்து கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து,காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை செய்து வர முகத்தில் க‌ருவளையம் குறையும்.
Flag Counter