யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label ஜலதோஷம். Show all posts
Showing posts with label ஜலதோஷம். Show all posts

Saturday, 16 February 2013

மூக்கடைப்பு தீர‌- கடுக்காய் , நெல்லிக்காய்

நெல்லிக்காய்
அறிகுறிகள்:
  1. மூக்கடைப்பு
  2. சள
  3. மூக்கில் நீர் வடிதல்
தேவையான பொருள்கள்:
  1. கடுக்காய் பொடி
  2. நெல்லிக்காய் பொடி
  3. தேன்
செய்முறை :

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.

தலை குளிர்ச்சி- தேங்காய் எண்ணெய் , மஞ்சள் சாமந்தி பூ

மஞ்சள் சாமந்தி பூ 
அறிகுறிகள்:
  1. தீராத தலைவலி
  2. கண் எரிச்சல்
  3. ஒற்றை தலைவலி
தேவையான பொருட்கள்:
  1. மஞ்சள் சாமந்தி பூ
  2. தேங்காய் எண்ணெய்
செய்முறை:
  1. காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
  2. 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
  3. மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
  4. பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
  5. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மார்புச் சளி- ஏலக்காய்,நெய்

ஏலக்காய் 
அறிகுறிகள்:
  1. தும்மல்.
  2. அதிக இருமல்.
  3. மூக்கில் சளி வடிதல்.
  4. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. ஏலக்காய் பொடி
  2. நெய்
செய்முறை:
 
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.

ஜலதோஷம் - சீரகப் பொடி கற்கண்டு

சீரகம்
அறிகுறிகள்:
  1. மூக்கில் நீர் வடிதல்.
  2. தொண்டை வலி.
  3. சளி.
  4. நெஞ்சு வலி.
  5. தலைவலி.
  6. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. சீரகம்
  2. பனங்கற்கண்டு.
செய்முறை:

சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு  சேர்த்து  2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

ஜலதோஷம்- திப்பிலி , கடுகு,வேப்பங் கொழுந்து

கடுகு
அறிகுறிகள்:
  1. தொண்டையில் கரகரப்பு.
  2. இருமல்.
  3. காய்ச்சல்.
  4. மூக்கில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. திப்பிலி.
  2. கடுகு
  3. சீரகம்
  4. சுக்கு
  5. மிளகு
  6. வேப்பங் கொழுந்து
செய்முறை:

திப்பிலி, கடுகு,  சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து  நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

சளித் தொல்லை - ஆடாதொடா இலை , துளசி, தூதுவளை

ஆடாதொடா இலை
அறிகுறிகள்:
  1. மூச்சு விட முடியாமல் சோர்வு.
  2. சளி.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதொடா இலை
  2. வெற்றிலை
  3. துளசி
  4. தூதுவளை
  5. தேன்
செய்முறை:

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை  இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக  அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

இருமல்- இஞ்சி ,எலுமிச்சைப் பழம் ,ஆப்பிள்

இஞ்சி
அறிகுறிகள்:
  1. இருமல்.
  2. பசியின்மை.
  3. சளி.
  4. ஜீரணம்.
தேவையான பொருட்கள்:
  1. ஆப்பிள்
  2. இஞ்சி
  3. எலுமிச்சைச் சாறு
  4. வெள்ளை பூண்டு
  5. தேன்
செய்முறை:

1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால்  சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்

வலிப்பு குறைய- வல்லாரைக் கீரை , மிளகு,சீரகம்

வல்லாரைக் கீரை 
அறிகுறிகள்:
  1. சளி அதிகமாக இருத்தல்.
  2. பயப்படுதல்.
  3. காய்ச்சல் அதிகரித்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. வல்லாரைக் கீரை
  2. தேங்காய்பால்
  3. மிளகு
  4. சீரகம்
செய்முறை:

வல்லாரைக் கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து சமையல் செய்து சாப்பிடவும்.

சளி நீங்க- தேன்,முருங்கைகாய்

முருங்கைகாய் 
அறிகுறிகள்:
  1. தொண்டை அடைத்தல்.
  2. காய்ச்சல்.
  3. இருமல்.
தேவையானப் பொருள்கள்:
  1. முருங்கைகாய்
  2. தேன்
செய்முறை:

முருங்கைகாய் நசுக்கி சாறெடுத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிடவும்.

சளி போக- ஒமம்,பசும்பால்

பசும்பால் 
அறிகுறிகள்:
  1. இருமல்
  2. தொண்டை வலி.
  3. காய்ச்சல்.
  4. தொண்டை அடைத்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. ஒமம்.
  2. பால்
செய்முறை:

பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.

சளி குறைய - இஞ்சி , துளசி

துளசி 
அறிகுறிகள்:
  1. தொண்டை அடைத்தல்.
  2. இருமல்.
  3. தொண்டை வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. துளசி
  2. இஞ்சி
செய்முறை:

துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.

இருமல் குணமாக- தேன்,எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம் 
அறிகுறிகள்:
  1. ஜலதோஷம்
  2. தொண்டை எரிச்சல்
தேவையானப் பொருள்கள்:
  1. எலுமிச்சம்பழம்
  2. தேன்
செய்முறை:

எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்

சளி தீர- மிளகு, துளசி

துளசி
அறிகுறிகள் :
  1. சளி.
  2. இருமல்.
தேவையான பொருட்கள் :
  1. துளசி
  2. மிளகு
செய்முறை :

துளசி சாற்றில் 5 மிளகைத் தூள் செய்து கலந்து சாப்பிட சளி தீரும்.

ஜலதோஷம் குறைய- வெற்றிலை, சுக்கு , மிளகு

வெற்றிலை
அறிகுறிகள்:
  1. மூக்கிலிருந்து நீர் வடிதல்.
  2. சளி.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. வெற்றிலச்சாறு.
  2. சுக்கு
  3. மிளகு
  4. பனங்கற்கண்டு.
செய்முறை:

வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.

ஜலதோஷம் குறைய சர்க்கரை,ம‌ஞ்ச‌ள் பொடி

ம‌ஞ்ச‌ள் பொடி 
அறிகுறிகள்:
  1. மூக்கடைப்பு.
  2. ஜலதோஷம்.
தேவையான பொருட்கள்:
  1. மஞ்சள் பொடி.
  2. சர்க்கரை
செய்முறை :

மஞ்சள் பொடியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரைச் சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.

ஜலதோஷம் குறைய- அரைக்கீரை , மிளகு,அரைக்கீரை

அரைக்கீரை 
அறிகுறிகள்:
  1. மூக்கில் நீர் வடிதல்.
  2. சளி.
தேவையான பொருட்கள்:
  1. அரைக்கீரை
  2. மிளகு
செய்முறை:

அரைக்கீரையுடன் மிளகு பொடி சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர ஜலதோஷம் குறையும்.

காய்ச்சல் குறைய - இஞ்சி , புதினா கீரை, தேன்

புதினா கீரை
அறிகுறிகள் :
  1. காய்ச்சல்
  2. பசியின்மை
  3. ஊடல் சோர்வு
தேவையானப்பொருட்கள் :
  1. இஞ்சி
  2. புதினாக்கீரை
  3. தேன்
செய்முறை :

இஞ்சி மற்றும் புதினா கீரை சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.

காய்ச்சல் குறைய அதிமதுரம் , சீரகம்,சுக்கு

அதிமதுரம்
அறிகுறிகள்:
  1. காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. பற்பாடகம்.
  2. நிலவேம்பு.
  3. சீரகம்
  4. சுக்கு
  5. அதிமதுரம்
செய்முறை:

பற்பாடகம், நிலவேம்பு,சீரகம்,சுக்கு,அதிமதுரம் இவைகளை எடுத்து நைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும்.

காய்ச்சல் குறைய- பற்பாடகம் - நெருஞ்சில் - திப்பிலி

பற்பாடகம்திப்பிலிநெருஞ்சில்
அறிகுறிகள்:
  1. காய்ச்சல் .
தேவையானப் பொருள்கள்:
  1. பற்பாடகம்.
  2. சுக்கு
  3. முத்த்க்காசு.
  4. நெருஞ்சில் வேர்
  5. திப்பிலி
செய்முறை:

பற்பாடகம், நெருஞ்சில் வேர் ,முத்த்க்காசு ,சுக்கு,திப்பிலி இவைகளை  எடுத்து நைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சிய கஷாயத்தை அரை டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குறையும்.

காய்ச்ச‌ல் குறைய- சீந்தில் கொடி, சீரகம்,தேன்

சீந்தில் கொடி
அறிகுறிகள்:
  1. சளி
  2. இருமல்
தேவையானப் பொருட்கள்:
  1. சீந்தில் கொடி.
  2. சீமை அசுவ‌கெந்தி.
  3. ப‌ற‌ங்கிச் ச‌க்கை.
  4. சுக்கு
  5. சீர‌க‌ம்
  6. அரிசி
  7. திப்பிலி.
  8. ஏல‌ரிசி.
  9. தேன்
செய்முறை:

சீந்தில் கொடியை  இடித்து சலித்து அதில் சீமை அசுவ‌கெந்தி, ப‌ற‌ங்கிச் ச‌க்கை, சுக்கு, சீர‌க‌ம், அரிசி, திப்பிலி, ஏல‌ரிசி இவைகளை சேர்த்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் காய்ச்சல் குறையும்.
Flag Counter