யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 20 February 2013

வாய்கிரந்தி குறைய- கிரந்தி நாயகம் செடி , நன்னாரி வேர்,பெருமரம்

கிரந்தி நாயகம் செடிநன்னாரி வேர்பெருமரம்
அறிகுறிகள்:
 • வாய்ப்புண்.
 • வாய் கிரந்தி.
தேவையான பொருட்கள்:
 1. திப்பிலி
 2. சுக்கு
 3. கடுக்காய்
 4. பருத்தி வேர்
 5. கிரந்திநாயகம் வேர்
 6. நன்னாரி வேர்
 7. கண்டங்கத்திரி வேர்
 8. பெருமரத்துப்பட்டை
 9. வேப்பம் பட்டை
 10. சிற்றாமணக்கு எண்ணெய்
செய்முறை:

திப்பிலி, சுக்கு, கடுக்காய், பருத்தி வேர், கிரந்திநாயகம் வேர், நன்னாரி வேர், கண்டங்கத்திரி வேர், பெருமரத்துப்பட்டை, வேப்பம் பட்டை ஆகிய பொருட்களை எடுத்து சுத்தம் செய்து ஒரு கல்வத்தில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும். ஒரு மண் சட்டியில்  சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி அதில் இடித்த பொருட்களை போட்டு நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்பு அதை இறக்கி ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரப்படுத்தவேண்டும். காலை ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்கிரந்தி குறையும்.

No comments:

Post a Comment