யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை புண் குறைய - திப்பிலி . வால் மிளகு, கருஞ்சீரகம்


அறிகுறிகள்:

    தொண்டைப்புண்.

தேவையான பொருள்கள்:

    திப்பிலி = 100 கிராம்
    வால் மிளகு = 20 கிராம்
    அதிமதுரம் = 20 கிராம்
    கருந்துளசி இலை (காய்ந்தது) = 20 கிராம்
    கருஞ்சீரகம் = 20 கிராம்
    மாசிக்காய் = 20 கிராம்

செய்முறை:

திப்பிலி, வால் மிளகு, அதிமதுரம், கருந்துளசி இலை, கருஞ்சீரகம்  மற்றும் மாசிக்காய் அனைத்தையும் ஒன்றிரண்டாக உடைத்து ஒரு மண் பாத்திரத்தில் இளம் வறுவலாக வறுத்து எடுத்து வெயிலில் காய வைத்து மீண்டும் மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி நெய்யை ஊற்றி வறுத்து எடுத்து ஒரு மண் தட்டில் பரப்பி வைத்து 6 மணி நேரம் காய வைத்து நன்றாக இடித்து சலித்து சாப்பிட்டு வரவும்.

உபயோகிக்கும் முறை:

 காலை உணவிற்கு 1 மணி நேரம் முன் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்தும் சாப்பிடலாம். மாலையும் இவ்வாறு சாப்ப்டவும். தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

சாப்பிட கூடாதவை:

 இளநீர், த்யிர், குளிர்ந்த பானங்கள், கடலை வகைகள், கிழங்கு வகைகள், பழஞ்சோறு, பழ‌ங்குழம்பு மற்றும் குளிர்ந்த தண்ணீர் ஆகியவற்றை தவிர்க்கவும். வெந்நீர் பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment