செய்முறை:
வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு
நன்கு காய்ச்சி வடிக்கட்டி அந்த நீரில் தேன் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ்
வீதம் பத்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குறையும்.
செய்முறை:
சந்தனத் தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி தண்ணீரில் போட்டு 150 மி.லியாகச்
சுண்டக் காய்ச்சி வடிக்கட்டி மூன்று வேளையும் 50 மி.லி வீதம் குடித்து
வந்தால் மார்பு வலி குறையும்.
செய்முறை:
மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை
ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அவற்றை 8 பங்கு தண்ணீர் விட்டு அதை 4 பங்காக
வற்ற வைத்து காலை, மாலை இருவேளை குடித்துவந்தால் இதயம் வலு பெறும்.
செய்முறை:
கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்த நன்கு சுத்தம் செய்து
பின்பு அதை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி
குறையும்.