யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label ஒற்றைத் தலைவலி. Show all posts
Showing posts with label ஒற்றைத் தலைவலி. Show all posts

Wednesday, 13 February 2013

தலை குளிர்ச்சி - மஞ்சள் சாமந்தி பூ

மஞ்சள் சாமந்தி பூ 
அறிகுறிகள்:
  1. தீராத தலைவலி
  2. கண் எரிச்சல்.
  3. ஒற்றை தலைவலி
தேவையான பொருட்கள்:
  1. மஞ்சள் சாமந்தி பூ
  2. தேங்காய் எண்ணெய்
செய்முறை:
  1. காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
  2. 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
  3. மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
  4. பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
  5. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

ஒற்றைத் தலைவலி - மாமரப் பூ.

மாமரம்
அறிகுறிகள்:
  1. ஒற்றைத் தலைவலி.
  2. தீராத தலைவலி.
  3. கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. மாமரப் பூ
செய்முறை:

மாமரத்தின் பூவை நிழலில் உலர வைத்து பின்பு தணலை தனியாக எடுத்து அதில் உலர்ந்த மாமரப் பூவைப்
போட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் ஒற்றைத் தலைவலி பூரணமாக குணமாகும்.

தலை வலி நீங்க- உப்பு, மிளகு

உப்பு 
அறிகுறிகள்:
  1. ஒரு பக்கமாக வலித்தல்.
  2. தலை பாரமாக இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. உப்பு
  2. மிளகு
செய்முறை:

உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்

தலை வலி குறைய- மிளகு , துளசி

துளசி 
அறிகுறிகள்:
  1. தலை வலித்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. மிளகு
  2. துளசி
செய்முறை:

மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .

தலை வலி விலக- கொத்தமல்லி

கொத்தமல்லி 
அறிகுறிகள்:
  1. தலை பாரமாக இருத்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. கொத்தமல்லி சாறு
செய்முறை:

கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

தலைபாரம் குறைய- தும்பை பூ , நல்லெண்ணெய்

தும்பை பூ 
அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றை தலை வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. நல்லெண்ணெய்
  2. தும்பை பூ
செய்முறை:

நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

ஒற்றை தலைவலி குறைய- இஞ்சி , எலுமிச்சை

இஞ்சி
அறிகுறிகள்:
  1. ஒற்றை தலைவலி.
  2. தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. எலுமிச்சை
  2. இஞ்சி
செய்முறை:

எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

ஒற்றை தலைவலி குறைய- நல்லெண்ணெய் ,செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ
அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றைத் தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. செம்பருத்தி பூ
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.

ஒற்றைத் தலைவலி குணமாக - பூண்டு ,நல்லெண்ணெய்

மிளகு
அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றைத் தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. மிளகு
  2. பூண்டு
  3. நல்லெண்ணெய்
செய்முறை:

மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.

தலை வலி குறைய - இஞ்சி

இஞ்சி
அறிகுறிகள்:
  1. தலை வலி.
தேவையான பொருட்கள்:
  1. இஞ்சி
செய்முறை:

இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.

‌ஒற்றைத் த‌லைவ‌லி குறைய - சிறுகீரை , மிளகு, மஞ்சள்

மஞ்சள்
அறிகுறிகள்:
  1. ஒற்றை தலைவலி.
  2. தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. சிறுகீரை
  2. மிளகு
  3. மஞ்சள்
  4. நல்லெண்ணெய்
செய்முறை :

சிறு கீரை வேர், மிளகு, மஞ்சள் மூன்றையும் நறுக்கி நல்லெண்ணெயில் காய்ச்சி குளித்தால் குறையும்.

ஒற்றை தலைவலி குறைய- அதிமதுரம் தேன் தேன் சோம்பு சோம்பு

சோம்பு 
அறிகுறிகள்:
  1. ஒற்றை தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. அதிமதுரம்
  2. சோம்பு.
  3. தேன்
செய்முறை:

அதிமதுரம், சோம்பு இவற்றை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட ஒற்றை தலைவலி குறையும்.

ஒற்றைத் தலைவலி குறைய - எட்டி மரம் , மிளகு,வெள்ளைப் பூண்டு

எட்டி மரம் 
அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றைத் தலைவலி.
தேவையானப் பொருட்கள்:
  1. எட்டி மரத்தின் இளந்தளிர்.
  2. மிளகு
  3. வெள்ளைப் பூண்டு
  4. நல்லெண்ணெய்
செய்முறை:

எட்டி மரத்தின் இளந்தளிரை ஒரு கைபிடியளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 10 கிராம் மிளகு 10 கிராம் வெள்ளைப் பூண்டு  அரைத்து போட்டு 500 லி நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறிய பின் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் சேர்த்து குளித்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

ஒற்றைத் தலைவலி குறைய - பொன்னாங்கன்னி , சிறுகீரை,ஆவாரை

ஆவாரை
அறிகுறிகள்:
  1. தலைவலி.
  2. ஒற்றைத் தலைவலி.
  3. க‌ண் ச‌ம்ப‌ந்த‌மான‌ நோய்க‌ள்.
தேவையான பொருட்கள்:
  1. பொன்னாங்கண்ணி சாறு
  2. சிறுகீரை சாறு
  3. ஆவாரைகொழுந்து சாறு
  4. நெய்
  5. கிராம்பு
  6. மரமஞ்சள்.
  7. ஏலரிசி.
  8. வால்மிளகு.
  9. கோஷ்டம்.
  10. மிளகு
  11. செண்பகப்பூ.
  12. அதிமதுரம்
  13. தேவதாரம்.
  14. ஜாதிக்காய்
  15. வெட்டிவேர்
  16. சந்தனம்
  17. அரத்தை
  18. சிற்றாமணக்கு எண்ணெய்
  19. நல்லெண்ணெய்
செய்முறை:

பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய் ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி, வால்மிளகு, கோஷ்டம் மிளகு, செண்பகப்பூ, அதிமதுரம், தேவதாரம், ஜாதிக்காய், வெட்டிவேர், சந்தனம், அரத்தை இவைகளை  எல்லாம் சிறிதளவு எடுத்து தட்டி போட்டு,  சிற்றாமணக்கு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சமஅளவு விட்டு சிவக்க காய்ச்சி தலைக்கு தேய்த்துக் குளித்து வர ஒற்றைத் தலைவலி குறையும்.

ஒற்றை தலைவலி குறைய - எட்டி இலை, மிளகு ,பூண்டு

எட்டி இலை 
அறிகுறிகள்:
  1. ஒற்றை தலைவலி.
தேவையானப் பொருள்கள்:
  1. எட்டி இலை.
  2. மிளகு
  3. பூண்டு
  4. நல்லெண்ணெய்
செய்முறை:

எட்டி மர துளிர் இலைகளை பறித்து பொடியாக நறுக்கி அதனுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து ஒரு டம்ளர் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி இலை சிவந்த பின் இறக்கி வடிகட்டித் தலையில் தேய்த்து அரைமணி  நேரம் ஊறிய பின் குளித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்

ஒற்றைத் தலைவலி குறைய‌- எலுமிச்சை

எலுமிச்சை
அறிகுறிகள் :
  1. ஒற்றைத் தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சை
செய்முறை :

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

ஒற்றைத் தலைவலிக்கு -பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு 
அறிகுறிகள் :
  1. ஒற்றைத் தலைவலி.
  2. தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. பாதாம் பருப்பு
செய்முறை :

10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிட ஒற்றைத் தலைவலி குறையும்.

ஒற்றை தலைவலி குறைய - மிளகாய் , பசும்பால்,மிளகு

மிளகாய் 
அறிகுறிகள்:
  • ஒற்றை தலைவலி.
தேவையானப் பொருள்கள்:
  1. மிளகாய்
  2. நல்லெண்ணெய்
  3. மிளகு
  4. பசும்பால்
செய்முறை:

மிளகாயை நீரிலிட்டு நன்கு காய்ச்சி இறக்கி அதில் நல்லெண்ணெய் சேர்த்து கலக்கி ,  மிளகை பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து,அந்த விழுதையும்  அதனுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி அதை காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

ஒற்றை தலைவலி குறைய - பால்- வெள்ளை எள்

வெள்ளை எள் 
அறிகுறிகள்:
  • ஒற்றை தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. வெள்ளை எள்
  2. எருமைப் பால்
செய்முறை:

வெள்ளை எள்ளை எடுத்து அதை எருமைப் பால் விட்டு நன்கு அரைத்து சூரிய உதயத்திற்கு முன் தலையில் பற்றுப் போட்டு பின் சூரிய ஒளியில் காட்டினால் ஒற்றை தலைவலி குறையும்

மண்டைக்குத்து குறைய - இண்டு, ஆடாதோடை,கண்டங்கத்திரி

இண்டுகண்டங்கத்திரி
அறிகுறிகள்:
  • மண்டைக்குத்து.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதோடை
  2. கண்டங்கத்திரி
  3. இண்டு.
  4. தேன்
செய்முறை:

ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு மூலிகை இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் தேன் சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து குறையும்.
Flag Counter