யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label இருமல். Show all posts
Showing posts with label இருமல். Show all posts

Saturday, 16 March 2013

பேசுவது கடினமாக இருந்தால்- வில்வ இலை. பால்

பால் 
அறிகுறிகள்:
  1. பேசுவதில் கடினம்.
  2. நாக்கு உலருதல்.
  3. கண் சிமிட்டுதல்.
தேவையான பொருட்கள்:
  1. வில்வ இலை.
  2. பால்
செய்முறை:
  1. ஒரு நாளைக்கு 3 வில்வ இலைகளை சாப்பிட வேண்டும்
  2. சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டும்.

தலை குளிர்ச்சி - மஞ்சள் சாமந்தி பூ. தேங்காய் எண்ணெய்.

மஞ்சள் சாமந்தி பூ 
அறிகுறிகள்:
  1. தீராத தலைவலி.
  2. கண் எரிச்சல்.
  3. ஒற்றை தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. மஞ்சள் சாமந்தி பூ.
  2. தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
  1. காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
  2. 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
  3. மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
  4. பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
  5. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மார்பு எரிச்சல் - சோம்பு. கொத்தமல்லி. சுக்கு. பனைவெல்லம்.

கொத்தமல்லி
அறிகுறிகள்:
  1. வறட்டு இருமல்.
  2. மார்பில் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. சோம்பு.
  2. கொத்தமல்லி.
  3. சுக்கு.
  4. பனைவெல்லம்.
செய்முறை:
இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி, இரண்டு துண்டு சுக்கு, இரண்டு தேக்கரண்டி சோம்பு மற்றும் சிறிதளவு பனை வெல்லம் எடுத்து நன்கு கொதிக்க வைத்து அந்த கஷாயத்தை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பருகவும்

தொண்டை கரகரப்பு - பூவரச மர வேர். பூவரச மரபட்டை.

பூவரச பூ
அறிகுறிகள்:
  1. தொண்டையில் கரகரப்பு.
  2. தொண்டையில் எரிச்சல்.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. பூவரச மர வேர்.
  2. பூவரச மரபட்டை.
செய்முறை:
ஒரு கையளவு பூவரச மர வேர் மற்றும் அதன் பட்டையை கஷாயம் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளிக்கவ்வும்.

மார்புச் சளி - ஏலக்காய் பொடி. நெய்.

ஏலக்காய்
அறிகுறிகள்:
  1. தும்மல்.
  2. அதிக இருமல்.
  3. மூக்கில் சளி வடிதல்.
  4. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. ஏலக்காய் பொடி.
  2. நெய்.
செய்முறை:
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.

ஜலதோஷம்- சீரகம். பனங்கற்கண்டு.

கற்கண்டு
அறிகுறிகள்:
  1. மூக்கில் நீர் வடிதல்.
  2. தொண்டை வலி.
  3. சளி.
  4. நெஞ்சு வலி.
  5. தலைவலி.
  6. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. சீரகம்.
  2. பனங்கற்கண்டு.
செய்முறை:
சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு  சேர்த்து  2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் - சுக்கு. மிளகு. வேப்பங் கொழுந்து.

வேப்பங் கொழுந்து

அறிகுறிகள்:
  1. தொண்டையில் கரகரப்பு.
  2. இருமல்.
  3. காய்ச்சல்.
  4. மூக்கில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. திப்பிலி.
  2. கடுகு.
  3. சீரகம்.
  4. சுக்கு.
  5. மிளகு.
  6. வேப்பங் கொழுந்து.
செய்முறை:
திப்பிலி, கடுகு,  சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து  நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

சளித் தொல்லை - ஆடாதொடா இலை. வெற்றிலை. துளசி.

ஆடாதொடா இலை
அறிகுறிகள்:
  1. மூச்சு விட முடியாமல் சோர்வு.
  2. சளி.
  3. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதொடா இலை.
  2. வெற்றிலை.
  3. துளசி.
  4. தூதுவளை.
  5. தேன்.
செய்முறை:
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை  இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக  அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

இருமல் - ஆப்பிள். இஞ்சி. எலுமிச்சைச் சாறு.

எலுமிச்சைப் பழம்
அறிகுறிகள்:
  1. இருமல்.
  2. பசியின்மை.
  3. சளி.
  4. ஜீரணம்.
தேவையான பொருட்கள்:
  1. ஆப்பிள்.
  2. இஞ்சி.
  3. எலுமிச்சைச் சாறு.
  4. வெள்ளை பூண்டு.
  5. தேன்.
செய்முறை:
1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால்  சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்

இருமல் - அதிமதுரம்.

அதிமதுரம் செடி
அறிகுறிகள்:
  1. இருமல்.
  2. நெஞ்சு வலி.
தேவையான பொருட்கள் :
  1. அதிமதுரம்.
செய்முறை:
இருமல் மற்றும்  நெஞ்சு வலி யின் போது அதிமதுரத்தைஎடுத்து வாயில் சிறிது நேரம் வைத்து ஒதுக்கி கொண்டால் இருமல் மற்றும் நெஞ்சு வலி குணமாகும்.

இருமல் போக - துளசியிலை.

துளசி செடி
அறிகுறிகள்:
  1. தொண்டை வறண்டு காணப்படுதல்
  2. தொண்டை எரிச்சல்
  3. இருமல்
தேவையான பொருட்கள்:
  1. துளசியிலை.

செய்முறை:

துளசியிலை சாறு  2-ஸ்பூன் குடித்தால் இருமல் நிற்கும்.

சளி குறைய - துளசி. இஞ்சி.

துளசி 
அறிகுறிகள்:
  1. தொண்டை அடைத்தல்.
  2. இருமல்.
  3. தொண்டை வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. துளசி.
  2. இஞ்சி.
செய்முறை:
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.

வறட்டு இருமல் குறைய - துளசி. ஆடாதோடை. வெற்றிலை

வெற்றிலை
அறிகுறிகள்:
  1. வறட்டு இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. துளசி.
  2. ஆடாதோடை.
  3. வெற்றிலை.
  4. சுக்கு.
  5. மிளகு.
  6. திப்பிலி.
  7. சுக்கரா
செய்முறை:
துளசி, ஆடாதோடை, வெற்றிலை, சுக்கு, மிளகு, திப்பிலி,சுக்கரா இவற்றை அரைத்து அடுப்பில் வைத்து கிண்டி பாகு போல் ஆக்கி ஆறிய பின் தேன் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட  வறட்டு இருமல் குறையும்.

இருமல் குறைய - சித்தரத்தை. ஓமம். கடுக்க்காய்த் தோல்

திப்பிலி
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. சித்தரத்தை.
  2. ஓமம்.
  3. கடுக்க்காய்த் தோல்
  4. மிளகு.
  5. திப்பிலி.
  6. தாளிசபத்திரி
  7. சுக்கரா
  8. தேன்.
செய்முறை:
சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி,சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட சளி குறையும்.

இருமல் குறைய - கண்டங்கத்திரி வேர். பால்.

கண்டங்கத்திரி 
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. கண்டங்கத்திரி வேர்.
  2. பால்.
செய்முறை:
கண்டங்கத்திரி வேரை சுத்தம் செய்து அரைத்து பாலில் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க இருமல் குறையும்.

இருமல் குறைய - நெல்லிக்காய். ஏலக்காய். ரோஜா இதழ்கள். தேன்.

ரோஜா இதழ்கள்
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. நெல்லிக்காய்.
  2. ஏலக்காய்.
  3. ரோஜா இதழ்கள்.
  4. தேன்.
செய்முறை:
நெல்லிக்காய், ஏலக்காய், ரோஜா இதழ்கள் இவற்றை  நிழலில் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

இருமல் குறைய - புங்கன் வேர், பட்டை. தேன்.

புங்கன் மரம்
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. புங்கன் வேர், பட்டை.
  2. தேன்.
செய்முறை:
புங்கன் வேர், பட்டை இரண்டையும் காய வைத்து பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.

இருமல் குறைய - நன்னாரி வேர். பால்.

நன்னாரி
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. நன்னாரி வேர்.
  2. பால்.
செய்முறை:
நன்னாரி வேரை அரைத்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க இருமல் குறையும்.

இருமல் குறைய - கொன்றைப்பட்டை. தூதுவளை. தேன்.

கொன்றைமரம்
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. கொன்றைப்பட்டை.
  2. தூதுவளை.
  3. தேன்.
செய்முறை:
கொன்றைப்பட்டை, தூதுவளை இரண்டையும் காய வைத்து பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.

இருமல் குறைய - சிறு குறிஞ்சா வேர்.

சிறு குறிஞ்சா
அறிகுறிகள்:
  1. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. சிறு குறிஞ்சா வேர்.
செய்முறை:
சிறு குறிஞ்சா வேரை சுண்ட காய்ச்சி காலை, மாலை குடிக்க இருமல் குறையும்.
Flag Counter