யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label மூக்கடைப்பு. Show all posts
Showing posts with label மூக்கடைப்பு. Show all posts

Thursday, 14 February 2013

மூக்கடைப்பு தீர‌- கடுக்காய் , நெல்லிக்காய்

கடுக்காய்
அறிகுறிகள்:
  1. மூக்கடைப்பு
  2. சளி
  3. மூக்கில் நீர் வடிதல்
தேவையான பொருள்கள்:
  1. கடுக்காய் பொடி
  2. நெல்லிக்காய் பொடி
  3. தேன்
செய்முறை :

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.

தலை குளிர்ச்சி- மஞ்சள் சாமந்தி பூ காய்ந்த மஞ்சள் சாமந்தி பூ , தேங்காய் எண்ணெய்

மஞ்சள் சாமந்தி பூ 
அறிகுறிகள்:
  1. தீராத தலைவலி.
  2. கண் எரிச்சல்
  3. ஒற்றை தலைவலி
தேவையான பொருட்கள்:
  1. மஞ்சள் சாமந்தி பூ
  2. தேங்காய் எண்ணெய்
செய்முறை:
  1. காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
  2. 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
  3. மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
  4. பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
  5. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

ஜலதோஷம் - சீரகம், கற்கண்டு

கற்கண்டு
அறிகுறிகள்:
  1. மூக்கில் நீர் வடிதல்.
  2. தொண்டை வலி.
  3. சளி.
  4. நெஞ்சு வலி.
  5. தலைவலி.
  6. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. சீரகம்
  2. பனங்கற்கண்டு.
செய்முறை

சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு  சேர்த்து  2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

ஜலதோஷம்- திப்பிலி , கடுகு,வேப்பங் கொழுந்து

வேப்பங் கொழுந்து
அறிகுறிகள்:
  1. தொண்டையில் கரகரப்பு.
  2. இருமல்.
  3. காய்ச்சல்.
  4. மூக்கில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. திப்பிலி.
  2. கடுகு
  3. சீரகம்
  4. சுக்கு
  5. மிளகு
  6. வேப்பங் கொழுந்து
செய்முறை

திப்பிலி, கடுகு,  சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து  நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

மூக்கடைப்பு தீர - பருப்பு, முசுமுசுக்கை

பருப்பு
அறிகுறிகள்:
  1. மூக்கடைப்பு
தேவையான பொருட்கள்:
  1. முசுமுசுக்கை.
  2. பருப்பு
செய்முறை:

முசுமுசுக்கை இலையை அவித்து பருப்புடன் கூட்டு செய்து தினமும் சாப்பிட்டு வர மூக்கடைப்பு குறையும்.

மூக்கடைப்பு குறைய- ஓமம் , வேப்ப இலை,ஓமம்

வேப்ப இலை
அறிகுறிகள் :
  1. மூக்கடைப்பு.
  2. மூக்கில் நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. வேப்ப இலை
  2. ஒமம்
செய்முறை :

வேப்ப இலையையும் ஓமத்தையும் அரைத்து நெற்றியில் பூச மூக்கடைப்பு குறையும்.

மூக்கடைப்பு தீர - எலுமிச்சைப் பழம் , மிளகு,கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்
அறிகுறிகள்:
  1. சளி.
  2. இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. கையான்.
  2. ஆதண்டை.
  3. குரட்டைப் பழம்.
  4. வெற்றிலை
  5. நெல்லிக்காய்
  6. எலுமிச்சைப் பழம்
  7. நாரத்தம் பழம்.
  8. முசுமுசுக்கை.
  9. முடக்கத்தான்.
  10. நல்லெண்ணெய்
  11. மிளகு
  12. அதிமதுரம்
  13. கோஷ்டம்.
  14. சண்பகப்பூ.
  15. நாற்சீரகம்.
  16. வாய்விலிங்கம்.
  17. கொத்தமல்லி
  18. வால் மிளகு
  19. கஸ்தூரி மஞ்சள்
  20. ஏலம்
  21. இலவங்கம்.
  22. தாளிசபத்திரி
  23. இலவங்கப்பட்டை.
  24. கோரோசனை.
செய்முறை:

கையான், ஆதண்டை, குரட்டைப் பழம், வெற்றிலை, நெல்லிக்காய், எலுமிச்சைப் பழம், நாரத்தம் பழம், முசுமுசுக்கை, முடக்கத்தான் இவற்றின் சாறு வகைக்கு ¼ படி(200ml). நல்லெண்ணெய் 1லிட்டர் ஒன்றாய் கலந்து அதில் மிளகு ¼ பலம் அதிமதுரம், கோஷ்டம், சண்பகப்பூ, நாற்சீரகம், வாய்விலிங்கம், கொத்தமல்லி, வால் மிளகு, கஸ்தூரி மஞ்சள், ஏலம், இலவங்கம், தாளிசப்பத்திரி, இலவங்கப்பட்டை வகைக்கு 5 வராக எடை, கோரோசனை ¼ வராகன் இவற்றை பொடித்து போட்டு காய்ச்சி இறுத்து மூன்று நாளைக்கு ஒருமுறை முழுகி வர மூக்கடைப்பு மாறும்.

மூக்கடைப்பு தீர- வல்லாரை , இலவங்கப்பட்டை, சந்தனம்

சந்தனம்
அறிகுறிகள்:
  1. சளி.
  2. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. நாரத்தம் பழம்.
  2. எலுமிச்சைப் பழம்
  3. புளியாரை.
  4. அறுகம்வேர்
  5. வல்லாரை
  6. கரிப்பான்.
  7. பொன்னாங்காணி
  8. ஆதண்டை.
  9. நல்லெண்ணெய்
  10. சந்தனம்
  11. சதகுட்டை.
  12. மஞ்சிட்டி.
  13. யானைத் திப்பிலி.
  14. கிராம்பு
  15. இலவங்கப்பத்திரி.
  16. தாளிசபத்திரி
  17. இலவங்கப்பட்டை.
  18. சண்பகப்பூ.
  19. செங்கழுநீர் கிழங்கு.
  20. பசும்பால்
செய்முறை:

நாரத்தம் பழம், எலுமிச்சைப் பழம், புளியாரை, அறுகம்வேர், வல்லாரை, கரிப்பான், பொன்னாங்காணி இவற்றின் சாறு வகைக்கு 1படி ஆதண்டைச் சாறு, நல்லெண்ணெய் வகைக்கு 2படி, சந்தனம், சதகுட்டை, மஞ்சிட்டி, யானைத் திப்பிலி, கிரம்பு, இலவங்கப்பத்திரி, தாளிசப்பத்திரி, இலவங்கப்பட்டை, சண்பகப்பூ வகைக்கு 4பலம் செங்கழுநீர் கிழங்கு 2 பலம் இவற்றை பசும்பாலில் அரைத்துப் போட்டுப் பதமாய்க் காய்ச்சி வடித்து மூன்று நாளைக்கு ஒருமுறை முழுகி வர மூக்கடைப்பு தீரும்.

மூக்கடைப்பு குறைய- சுக்கு , வெற்றிலை,முருங்கைப் பூ

முருங்கைப் பூ
அறிகுறிகள்:
  1. சளி.
  2. மூக்கிலிருந்து நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. கரிசாலை.
  2. அவுரி.
  3. கஞ்சா.
  4. பொன்னாங்காணி
  5. வெற்றிலை
  6. முசுமுசுக்கை.
  7. அகில் கட்டை.
  8. எலுமிச்சைப் பழம்
  9. குரட்டைப் பழம்
  10. அத்திப்பட்டை
  11. நல்லெண்ணெய்
  12. கருஞ்சீரகம்
  13. கடுகு ரோகினி
  14. கஸ்தூரி மஞ்சள்
  15. தான்றிக் காய்
  16. அதிவிடயம்.
  17. சுரத்தை.
  18. சுக்கு
  19. கோஷ்டம்.
  20. சதகுப்பை.
  21. குரோசாளி ஓமம்.
  22. சிறுநாகப் பூ.
  23. தாளிசபத்திரி
  24. திப்பிலி மூலம்.
  25. சித்திர மூலம்.
  26. பெருங்காயம்
  27. நெல்லிமுள்ளி.
  28. பிச்சி வேர்ப்பட்டை.
  29. மிளகரனைப் பட்டை.
  30. சீயாக்காய்.
  31. நெல்லி வேர்
  32. முருங்கைப் பூ
செய்முறை:

கரிசாலை, அவுரி, கஞ்சா, பொன்னாங்காணி, வெற்றிலை, முசுமுசுக்கை, அகில் கட்டை, எலுமிச்சைப் பழம், குரட்டைப் பழம், அத்திப்பட்டை, இவற்றின் சாறு நல்லெண்ணெய் வகைக்கு 2படி இவற்றை ஒன்றாய் கலந்து அதில் கருஞ்சீரகம், கடுகு ரோகினி, கஸ்தூரி மஞ்சள், தான்றிக் காய், அதிவிடயம், சுரத்தை, சுக்கு, கோஷ்டம், சதகுப்பை, குரோசாளி ஓமம், சிறுநாகப் பூ, தாளிசப்பத்திரி, திப்பிலி மூலம், சித்திர மூலம், பெருங்காயம், நெல்லிமுள்ளி, பிச்சி வேர்ப் பட்டை, மிளகரனைப் பட்டை, சீயாக்காய், நெல்லி வேர், வகைக்கு 1கழஞ்சு இவற்றை எலுமிச்சைப் பழ சாற்றில் அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்துச் சூட்டுடன் அதில் ஒருபிடி முருங்கைப் பூவைப் போட்டு வைத்துக்கொண்டு தலை முழுகி வர மூக்கடைப்பு குறையும்.

மூக்கடைப்பு குறைய- கடுகெண்ணெய், வெற்றிலை,மிளகு

கடுகெண்ணெய்
அறிகுறிகள்:
  1. சளி.
  2. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. கடுகெண்ணெய்
  2. குரட்டைப் பழம்.
  3. வெற்றிலை
  4. ஆதண்டை.
  5. உசிலம் பட்டை.
  6. மிளகு
  7. வால்மிளகு.
  8. சீரகம்
  9. சண்பகம்.
செய்முறை:

கடுகெண்ணெய் 1படி, குரட்டைப் பழம், வெற்றிலை, ஆதண்டை, உசிலம் பட்டை, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி ஒன்றாய் கலந்து அதில் மிளகு, வால்மிளகு, சீரகம், சண்பகம் வகைக்கு 1பலம் இவற்றைப் பொடித்துப் போட்டு காய்ச்சி வடித்து தலை முழுகி வர மூக்கடைப்பு குறையும்.

மூக்கடைப்பு தீர - குப்பைமேனி, நல்லெண்ணெய், ஆடுதீண்டாப்பாளை

குப்பைமேனி
அறிகுறிகள்:
  1. சளி.
தேவையான பொருட்கள்:
  1. குப்பைமேனி
  2. ஆடுதீண்டாப்பாளை
  3. அழிஞ்சில் வேர்.
  4. முள்ளி.
  5. நல்லெண்ணெய்.
செய்முறை:

குப்பைமேனி, ஆடுதீண்டாப்பாளை, அழிஞ்சில் வேர், முள்ளி, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி நல்லெண்ணெய் 1/4படி ஒன்றாய் கலந்து மெழுகு பதமாய்க் காய்ச்சி இறுத்து தலை முழுகி வர மூக்கடைப்பு தீரும்

மூக்கடைப்பு தீர - கருநொச்சி , மிளகு , நல்லெண்ணெய்

கருநொச்சி
அறிகுறிகள்:
  1. சளி.
  2. மூக்கிலிருந்து நீர் வடிதல்.
தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்
  2. கரிசாலை.
  3. கருநொச்சி.
  4. மிளகு.
  5. சாம்பிராணி.
செய்முறை:

நல்லெண்ணெய் 1படி, கரிசாலை சாறு,கருநொச்சி சாறு வகைக்கு 1/2படி  ஒன்றாய் கலந்து மிளகு 1 ½ பலம், சாம்பிராணி 1பலம் பொடித்துப் போட்டு வைத்துக்கொண்டு தலை  முழுகி வர மூக்கடைப்பு தீரும்

மூக்கடைப்பு தீர - நொச்சியிலை , பால்,திப்பிலி

நொச்சியிலை
அறிகுறிகள்:
  1. சளி.
தேவையான பொருட்கள்:
  1. நொச்சியிலை
  2. நல்லெண்ணெய்
  3. வெள்ளாட்டுப் பால்
  4. செவ்வியம்.
  5. திரிகடுகு.
  6. வாய்விளங்கம்.
  7. கருஞ்சீரகம்
  8. சுரத்தை.
  9. கஸ்தூரி மஞ்சள்
  10. திப்பிலிமூலம்
  11. நொச்சிப்பட்டை
  12. பால்
செய்முறை:

நொச்சியிலைச் சாறு, நல்லெண்ணெய், வெள்ளாட்டுப் பால், வகைக்கு 1 படி செவ்வியம், திரிகடுகு, வாய்விளங்கம், கருஞ்சீரகம், சுரத்தை, கஸ்தூரி மஞ்சள், திப்பிலிமூலம், நொச்சிப்பட்டை, வகைக்கு 1 பலம் இவைகளை மேற்படி பாலில் அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்துத் தலை முழுகி வர மூக்கடைப்பு தீரும்.

மூக்கடைப்பு தீர- எலுமிச்சை , வெட்டி வேர் . கற்றாழை

கற்றாழை
அறிகுறிகள்:
  1. சளி.
  2. மூக்கடைப்பு.
தேவையானப் பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்
  2. பசும்பால்
  3. இளநீர்
  4. கற்றாழை
  5. முசுமுசுக்கை.
  6. கற்பூரவல்லி
  7. எலுமிச்சைப் பழம்
  8. நாயுருவி
  9. சந்தனம்
  10. விலாமிச்சம் வேர்.
  11. வெட்டி வேர்.
  12. ஏலம்
  13. ஓமம்
  14. சுரத்தை.
  15. தேவதாரம்.
  16. மஞ்சள்
  17. கிளியூரம் பட்டை.
  18. தான்றிக்காய்
  19. சண்பகப் பூ.
  20. சிறுநாகப் பூ
  21. கஸ்தூரி மஞ்சள்
  22. மர மஞ்சள்.
  23. விழலரிசி.
  24. சிறு தேக்கு.
  25. வாழுவையரிசி.
செய்முறை:

நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில் நாயுருவி, சந்தனம், விலாமிச்சம் வேர், வெட்டி வேர், ஏலம், ஓமம், சுரத்தை, தேவதாரம், மஞ்சள், கிளியூரம் பட்டை, தான்றிக்காய், சன்பகப் பூ, சிறுநாகப் பூ, கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், விழலரிசி, சிறு தேக்கு, வாழுவையரிசி வகைக்கு 5 வராகன் எடை அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்து தலைமுழுகி வரத் தீரும்.

மூக்கடைப்பு குறைய- துளசி , சிறுநாகப்பூ, மஞ்சள்

சிறுநாகப்பூ
அறிகுறிகள்:
  1. இருமல்.
  2. சளி.
தேவையான பொருட்கள்:
  1. பூவரசு
  2. வெள்ளெருக்கு
  3. மல்தாங்கி.
  4. கஸ்தூரி மஞ்சள்
  5. சிறுநாகப்பூ
  6. வெடியுப்பு.
  7. புனுகு
  8. துளசி
செய்முறை

பூவரசு, வெள்ளெருக்கு, மல்தாங்கி இவற்றின் வேர், கஸ்தூரி மஞ்சள், சிறுநாகப்பூ, வெடியுப்பு, புனுகு இவற்றை ஓர் எடையாய் துளசி சாற்றுலாட்டித் துணியில் சேர்த்து திரிபோல் செய்து அதை புகை உண்டாக்கி அப்புகையை முகர மூக்கடைப்பு குறையும்

மூக்கடைப்பு குறைய- விரலி மஞ்சள்

விரலி மஞ்சள்
அறிகுறிகள்
  1. சளி.
தேவையான பொருட்கள்:
  1. விரலி மஞ்சள்.
செய்முறை:

விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு  குறையும்.

Wednesday, 13 February 2013

மூக்கடைப்பு குறைய- சுக்கு , பால், சர்க்கரை

சர்க்கரை
அறிகுறிகள்:
  1. சளி.
  2. மூக்கடைப்பு.
தேவையானப் பொருட்கள்:
  1. சுக்கு
  2. பால்.
  3. சர்க்கரை
செய்முறை:

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

மூக்கடைப்பு குறைய- தேன்,அகத்தி இலை

அகத்தி இலை
அறிகுறிகள் :
  1. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள் :
  1. அகத்தி 
  2. தேன்
செய்முறை :

அகத்தி இலைச் சாற்றில் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குறையும்.

மூக்கடைப்பு குறைய- அகில் மரம் , பசும்பால், நல்லெண்ணெய்

அகில் மரம்
அறிகுறிகள்:
  1. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. அகில் கட்டை.
  2. நல்லெண்ணெய்
  3. பசும்பால்
  4. அதிமதுரம்
  5. தான்றிக்காய்த் தோல்
செய்முறை:

அகில் கட்டை ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் ஒரு படி எடுத்து அதில் அதிமதுரம், தான்றிக்காய்த் தோல் சிறிது எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி வந்தால்  மூக்கடைப்பு  குறையும்.

மூக்கில் இரத்தம் வருவது குறைய- தேன் , ஆடுதீண்டாப்பாளை

ஆடுதீண்டாப்பாளை
அறிகுகள்:
  1. அடிபடுதல்.
  2. மூக்கில் புண் இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. ஆடுதீண்டாப்பாளை.
  2. தேன்
செய்முறை:

இரண்டு அவுன்ஸ் ஆடுதீண்டாப்பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.
Flag Counter