யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label கண் எரிச்சல். Show all posts
Showing posts with label கண் எரிச்சல். Show all posts

Wednesday, 20 February 2013

கண் நோய் நீங்க- நெல்லிக் கனி

நெல்லிக் கனி 
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்ணில் நீர் வடிதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. நெல்லிக் கனி
செய்முறை:

நெல்லிக் கனியை சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.

கண் நோய் போக - அகத்திக் கீரை

அகத்திக் கீரை 
அறிகுறிகள்:
  1. கண்ணில் நீர் வடிதல்.
  2. கண் வலி.
  3. கண் பார்வை குறைவு.
தேவையானப் பொருள்கள்:
  1. அகத்திக் கீரை
செய்முறை:

அகத்திக் கீரை சூப் செய்து அடிக்கடிசாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

கண்நோய் குணமாக - அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழம் 
அறிகுறிகள்:
  1. கண் வீங்குதல்.
  2. கண் எரிச்சல்.
  3. கண் வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. அன்னாசிப் பழம்
செய்முறை:

கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால்  குணமாகும்

கண் நோய் குறைய - நல்லெண்ணெய் , மிளகு

மிளகு
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
தேவையான பொருட்கள் :
  1. மிளகு
  2. நல்லெண்ணெய்
செய்முறை :

250 கிராம் மிளகை அரைத்து ஒரு படி நல்லெண்ணெயில் கலந்து 8 நாள் வெயிலில் காய வைத்து எடுத்து தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல், க‌ண் பார்வை ம‌ங்க‌ல் முத‌லான‌ வியாதிக‌ள் குறையும்.

கண்வலி குறைய- கற்றாழை

கற்றாழை
அறிகுறிகள்:
  1. கண் வலி.
தேவையான பொருட்கள்:
  1. கற்றாழை
செய்முறை:

மடல் சீவிய கற்றாழை துண்டை இரவு படுக்கும் முன் கண்ணில் கட்டி படுத்தால் கண்வலி குறையும்.

கண் எரிச்சல் குறைய - புளியங்கொட்டை , பால்

புளியங்கொட்டை
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள் :
  1. புளியங்கொட்டை
  2. பால்
செய்முறை :

சிறிதளவு புளியங்கொட்டை தூளை  பசும்பாலில் கலந்து  தினமும் குடித்து வர கண் எரிச்சல்  குறையும்.

கண் எரிச்சல் குறைய- நெருஞ்சி இலை , அருகம்புல் ,தேங்காய் எண்ணெய்

நெருஞ்சி இலை
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. நெருஞ்சிஇலை.
  2. அருகம்புல்
  3. தேங்காய் எண்ணெய்
செய்முறை:

நெருஞ்சி இலை, அருகம்புல், தேங்காய் எண்ணெய் மூன்றையும் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண் எரிச்சல் குறையும்.

கண் எரிச்சல் நீங்க- அதிமதுரம் , திப்பிலி, தேன்

திப்பிலிஅதிமதுரம்
அறிகுறிகள்:
  1. கண் மங்கலாக இருத்தல்.
  2. கண் எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. அதிமதுரம்
  2. க‌டுக்காய்.
  3. திப்பிலி.
  4. மிளகு
  5. தேன்
செய்முறை

அதிமதுரம், க‌டுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் அல்லது வெந்நீரில் சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கி கண் எரிச்சல் நீங்கும்.

கண் எரிச்சல் குறைய- நல்லெண்ணெய், முசுமுசுக்கை

முசுமுசுக்கை
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
தேவையான பொருட்கள்:
  1. முசுமுசுக்கை.
செய்முறை:

முசுமுசுக்கை இலைச் சாறோடு சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி  வடிக்க‌ட்டி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.

கண் நோய்கள் குறைய- பால் , அகத்திக் கீரை

அகத்திக் கீரை
அறிகுறிகள்:
  1. கண் வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. அகத்திக் கீரை
  2. பால்
செய்முறை:

அகத்திக் கீரையை இடித்து சாறு பிழிந்து ஒரு டம்ளர் அளவு எடுத்து அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்கி நன்றாகக் சிவக்க காய்ச்சி வடிக்கட்டி வைத்து கொண்டு வாரம் இரு முறை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் குறையும்.

கண் எரிச்சல் குறைய - அகத்திக் கீரை , தேங்காய் பால்,பாசி பருப்பு

அகத்திக் கீரை
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
தேவையான பொருட்கள் :
  1. அகத்திக் கீரை
  2. பாசி பருப்பு
  3. தேங்காய் பால்
செய்முறை :

அகத்திக் கீரை சாறு அரை டம்ளர் எடுத்து அதனுடன் அரை டம்ளர் பாசி பருப்பு சேர்த்து வேக வைத்து அரை டம்ளர் தேங்காய் பால்  கலந்து குடித்தால் கண் எரிச்சல் குறையும்.

கண் எரிச்சல் குறைய- தேன் - பாதிரி மரம்

பாதிரி மரம்
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
தேவையான பொருட்கள் :
  1. பாதிரி மரதின் வேர்.
  2. தேன்
செய்முறை :

பாதிரி மரத்தின் வேரை காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும்.

கண் நோய் குறைய- குங்குமப்பூ

குங்குமப்பூ
அறிகுறிகள்:
  1. கண் வலி.
  2. கண் எரிச்சல்.
தேவையானப் பொருட்டகள்:
  1. குங்குமப்பூ
  2. தாய்பால்
செய்முறை:

குங்குமப்பூவை தாய்பாலில் குழைத்து கண் இமை மீது பற்று போட்டால் கண் நோய் குறையும்

கண் நோய் குறைய- முருங்கைகீரை

முருங்கைகீரை
அறிகுறிகள்:
  1. கண் வலி.
  2. கண் எரிச்சல்.
தேவையானப் பொருட்டகள்:
  1. முருங்கைகீரை
செய்முறை:

முருங்கைகீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் கண் நோய் குறையும்.

கண் சூடு தணிய- கருவேப்பிலை

கருவேப்பிலை 
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. கறிவேப்பிலை மரபழங்கள்.
செய்முறை:

கறிவேப்பிலை மரபழங்களை சாப்பிட்டு வந்தால் கண்  சூடு தணியும், கண் பார்வை அதிகரிக்கும்.

கண் எரிச்சல் தீர- கோவை இலை

கோவை இலை
அறிகுறிகள்:
  • கண்களில் எரிச்சல்.
  • கண்ணில் நீர் வடிதல்.
தேவையானப் பொருட்கள்:
  1. கோவை இலை
செய்முறை:

சுத்தம் செய்த கோவை இலையை கஷாயம் செய்து குடித்து வந்தால் கண்களில் எரிச்சல் குறையும்.

தூக்கமின்மை குறைய- திருநீற்றுப்பச்சிலை

திருநீற்றுப்பச்சிலை
அறிகுறிகள்:
  1. தூக்கமின்மை.
தேவையானப் பொருள்கள்:
  1. திருநீற்றுப்பச்சிலை.
செய்முறை:

திருநீற்றுப்பச்சிலையை நசுக்கி  முகர தூக்கமின்மை குறையும்.

தூக்கமின்மை குறைய- சுரை இலை

சுரை இலை
அறிகுறிகள்:
  1. தூக்கமின்மை.
தேவையான பொருட்கள்:
  1. சுரை இலை.
செய்முறை:

சுரை இலையின் இளம் இலைகளைச் சமைத்து உண்ணத்  தூக்கமின்மை குறையும்.

கண்கள் குளிர்ச்சி பெற - முருங்கைப் பூ,பசும்பால்

முருங்கைப் பூ
அறிகுறிகள்:
  1. கண் எரிச்சல்.
  2. கண்களில் அதிக சூடு.
  3. கண் வலி.
தேவையானப் பொருட்கள்:
  1. முருங்கைப்பூ
  2. பால்
செய்முறை:

முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

கண்கள் குளிர்ச்சி பெற- வில்வ மரம்

வில்வ மரம் 
அறிகுறிகள்:
  1. கண் சூடு.
  2. கண் எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. வில்வம் பழம்
செய்முறை:
 
வில்வம் பழத்தை முழுமையாக அடுப்பில் போட்டு சுட்டு பிறகு அதை உடைத்து உள்ளே உள்ள விழுதை எடுத்துத் தலையில் தடவிக் கொண்டு ஊறிய பின் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சியும்,தெம்பும் ஏற்படும்.
Flag Counter