யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label கால் வலி. Show all posts
Showing posts with label கால் வலி. Show all posts

Sunday, 16 June 2013

படர் தாமரை குறைய - துளசி இலை. எலுமிச்சை பழம்.

துளசி இலை

றிகுறிகள்:
  1. அரிப்புகள்.
  2. புண்.
தேவையானப் பொருட்கள்:
  1. துளசி இலை.
  2. எலுமிச்சை பழம்.
செய்முறை:
படர் தாமரை உள்ள இடத்தை சுத்தம் செய்து 10 துளசி இலையை 5 துளி எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து கனமாக படர் தாமரை உள்ள இடத்தில் பூசினால் படர் தாமரை குறையும்.

படர் தாமரை குறைய - பூவரசம் பட்டை. எலுமிச்சைப் பழம்.

பூவரச மரம்

அறிகுறிகள்:
  1. அரிப்புகள்.
  2. புண்.
தேவையான பொருட்கள்:
  1. பூவரசம் பட்டை.
  2. எலுமிச்சைப் பழம்.
செய்முறை:
பூவரசம் பட்டையை எலுமிச்சை பழச்சாறுடன் அரைத்து பூசினால் படர் தாமரை குறையும்.

காலில் முள் குத்தியவலி குறைய - வெற்றிலை. நல்லெண்ணெய்.

வெற்றிலை
அறிகுறிகள்:
  1. காலில் முள் குத்தி வலி ஏற்படுதல்.
தேவையானப் பொருட்கள்:
  1. வெற்றிலை.
  2. நல்லெண்ணெய்.
செய்முறை:
வெற்றிலையில்  நல்லெண்ணெய் தடவி தணலில் காட்டி சூட்டோடு காலில் முள் குத்திய இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

படர் தாமரை குறைய - அமுக்கிரா கிழங்கு.

அமுக்கிரா  அமுக்கிரா கிழங்கு

அறிகுறிகள்:
  1. அரிப்புகள்.
  2. புண்.
தேவையான பொருட்கள்:
  1. அமுக்கிரா கிழங்கு.
செய்முறை:
அமுக்கிரா கிழங்கை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் படர்தாமரை குறையும்.

கால்வலி குறைய - மருதோன்றி. எலுமிச்சை.

எலுமிச்சை

அறிகுறிகள்:
  1. கால்வலி .
தேவையான பொருட்கள்:
  1. மருதோன்றி.
  2. எலுமிச்சை.
செய்முறை:
மருதாணி இலைகளை அரைத்து, எலுமிச்சைச் சாறில் குழைத்துத்   தேய்க்க கால்வலி குறையும்.

குதிகால் வலி குறைய - எருக்கு இலை.

எருக்கு செடி
அறிகுறிகள்:
  1. குதிகால் வலி.
தேவையானப் பொருள்கள்:
  1. எருக்கு இலை.
செய்முறை:
எருக்கு இலைகளை நெருப்பிலிட்டு வாட்டி, சூடாக இவ்விலை மேல் நின்றால் சில நாட்களில் குதிகால் வலி குறையும்.

குறிப்பு:
  • தொடர்ந்து நிற்பதால் மற்றும் உயரமான செருப்பு அணிவதால் ஏற்படும் குதிகால் வலி குறையும்.

யானைக்கால் வீக்கம் குறைய - வல்லாரை இலை.

வல்லாரை

அறிகுறிகள்:
  1. யானைக்கால் நோய்.
தேவையானப் பொருட்கள்:
  1. வல்லாரை இலை.
செய்முறை:
வல்லாரை இலையை அரைத்து  யானைக் கால் வீக்கம், ரணம் இவைகட்கு மேல் பூசுவதால் யானைக் கால் வீக்கம் குறையும்.

கணுக்கால் கட்டி குறைய வசம்பு. மஞ்சள். சுக்கு. சித்தரத்தை. வெற்றிலை.

சுக்கு
அறிகுறிகள்:
  1. கணுக்காலில் கட்டி.
தேவையான பொருள்கள் :
  1. வசம்பு.
  2. மஞ்சள்.
  3. சுக்கு.
  4. சித்தரத்தை.
  5. வெற்றிலை.
செய்முறை :
வசம்பு  5 கிராம் மஞ்சள்  5 கிராம் சுக்கு  5 கிராம் சித்தரத்தை  5 கிராம் எடுத்துப் பொடித்து  வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி  குறையும்.

காலில் கட்டி குறைய - எருக்கின் பழுத்த இலை. வசம்பு.

எருக்கஇலை

அறிகுறிகள்:
  1. காலில் கட்டி.
தேவையான பொருள்கள் :
  1. எருக்கின் பழுத்த இலை.
  2. வசம்பு.
செய்முறை :
எருக்கின் பழுத்த இலை  5,  வசம்பு  5 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.

பாத எரிச்சல் குறைய மருதாணி இலை. எலுமிச்சைச் சாறு.

மருதாணி இலை

அறிகுறிகள்:
  1. பாத எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. மருதாணி இலை.
  2. எலுமிச்சைச் சாறு.
செய்முறை:
மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.

பித்தவெடிப்பு குறைய - கரிசலாங்கண்ணி இலை. தேன்.

வெள்ளை கரிசலாங்கண்ணி

அறிகுறிகள்:
  1. பாதத்தில்  வெடிப்பு.
  2. பாதவலி.
தேவையான பொருள்கள் :
  1. கரிசலாங்கண்ணி இலை.
  2. தேன்.
செய்முறை :
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தவெடிப்பு குறையும்

பித்தவெடிப்பு குறைய - நன்னாரிவேர். பனகற்கண்டு.

நன்னாரிவேர்
அறிகுறிகள்:
  1. பாத வெடிப்பு.
தேவையான பொருள்கள் :
  1. நன்னாரிவேர்.
  2. பனகற்கண்டு.
செய்முறை :
நன்னாரிவேர் 10 கிராம் எடுத்து  ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி  பனகற்கண்டு சேர்த்து குடித்து வர‌ பித்தவெடிப்பு குறையும்.

பித்தவெடிப்பு குறைய - தேன். வெண்ணெய்.

வெண்ணெய்

அறிகுறிகள் :
  1. கால்களில் பித்தவெடிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. தேன்.
  2. வெண்ணெய்.
செய்முறை :
தேனையும், வெண்ணெயும் சேர்த்து, ஒன்றாய் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு குறையும்.

கால் வீக்கம் குறைய - பிண்ணாக்குக் கீரை. பார்லி.

பிண்ணாக்குக் கீரை

அறிகுறிகள்:
  1. கால் வீக்கம்.
தேவையானப் பொருட்கள்:
  1. பிண்ணாக்குக் கீரை.
  2. பார்லி.
செய்முறை:
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கால் வீக்கம் குணமாகும்.

யானைக்கால் வீக்கம் குறைய - முருங்கைப் பட்டை. கடுகு

முருங்கை

அறிகுறிகள் :
  1. யானைக்கால் வீக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. முருங்கைப் பட்டை.
  2. கடுகு.
செய்முறை :
யானைக்கால் வீக்கத்திற்கு முருங்கை மரப்பட்டையுடன் சிறிதளவு  கடுகு சேர்த்து நன்கு அரைத்து  லேசாக பற்று போடலாம்.

வீக்கம் குறைய - அமுக்கிராங்கிழங்கு. சுக்கு.

அமுக்கிராங்கிழங்கு
அறிகுறிகள்:
  • வீக்கம்.
தேவையான பொருள்கள்:
  1. அமுக்கிராங்கிழங்கு.
  2. சுக்கு.
செய்முறை:
அமுக்கிராங்கிழங்கை எடுத்து சுக்குடன் நன்றாக அரைத்து வீக்கத்தின் மேல் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குறையும்.

குறிப்பு:
  • காலில் உள்ள வீக்கம் குறையும்.

பித்த வெடிப்பு குறைய - சீனாக்காரம்.

சீனாக்காரம்

அறிகுறிகள்:
  • பித்த வெடிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. சீனாக்காரம்.
செய்முறை:
சீனாக்காரத்தைப் பொடியாக்கி  நன்கு உரசித் தேய்த்து வர பித்த வெடிப்பு குறையும்.

முள் குத்திய வலி குறைய‌ - உப்பு மிளகாய் நல்லெண்ணெய்

மிளகாய்

அறிகுறிகள்
  • காலில் வலி.
தேவையான பொருட்கள்
  1. உப்பு
  2. மிளகாய்
  3. நல்லெண்ணெய்
செய்முறை
உப்பு, மிளகாய் சம அளவு எடுத்து  நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வலி குறையும்

யானைக்கால் வீக்கம் குறைய- ஊமத்தைஇலை. ஆமணக்குஇலை. கருநொச்சிஇலை.

ஊமத்தை இலை  ஆமணக்கு இலை

அறிகுறிகள்:
  • யானைக்கால் வீக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. ஊமத்தைஇலை.
  2. ஆமணக்குஇலை.
  3. கருநொச்சிஇலை.
  4. சாறடை.
  5. முருங்கைஇலை.
  6. கடுகு.
செய்முறை:
ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து யானைக்கால் மீது பூச, யானைக்கால் வீக்கம் குறையும்.

கால்விரல் புண் குறைய - திரிபலாசூரணம். கருங்காலிக் கட்டை. வேப்பிலை. எள்.

க‌ருங்காலிக்க‌ட்டை

அறிகுறிகள்:
  • கால்விரல் இடுக்கில் புண்கள்.
  • சிரங்கு சொறி புண்கள்.
தேவையான பொருட்கள்:
  1. திரிபலாசூரணம்.
  2. கருங்காலிக் கட்டை.
  3. வேப்பிலை.
  4. எள்.
செய்முறை:
கால்விவிரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை திரிபலாசூரணம் 5 கிராம், கருங்காலிக் கட்டை 5 கிராம் போட்டுக் காய்ச்சிய 1 டம்ளர் தண்ணீரால் கழுவி, பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்துப் பூசிவர, கால்விரல் இடுக்கில் உள்ள புண் குணமாகும்.
Flag Counter