யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label மூக்கு. Show all posts
Showing posts with label மூக்கு. Show all posts

Thursday, 28 March 2013

இரத்தம் வருவது குறைய‌ - உலர்ந்த நெல்லிக்காய்.

நெல்லிக்காய்
அறிகுறிகள்:
  • மூக்கில் இரத்தம் வருதல்.
தேவையான பொருள்கள்:
  1. உலர்ந்த நெல்லிக்காய்.
செய்முறை:
மூக்கிலிலிருந்து இரத்தம் வருபவர்கள் சிறிதளவு உலர்ந்த நெல்லிக்காயை எடுத்து 25 மி.லி நீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து காலையில் எடுத்து துணியில் வடிகட்டி அந்த நீரை குடித்து விட்டு எஞ்சிய நெல்லிக்காயை அரைத்து நெற்றியிலும், கன்னத்திலும் பூசி வந்தால் இரத்தம் வருவது குறையும்.

மூக்கு சம்பந்தமான நோய்கள் குறைய - விநாயுருவி விதை.

நாயுருவி
அறிகுறிகள்:
  • மூக்கு சம்பந்தமான நோய்கள்
தேவையான பொருட்கள்:
  1. விநாயுருவி விதை.
செய்முறை:
நாயுருவி செடி விதைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கு சம்பந்தமான நோய்கள் குறையும்.

வெங்காயம். விளக்கெண்ணெய். - அருகம்புல். மாதுளை இலை.

மாதுளை இலை
அறிகுறிகள்:
  • மூக்கிலிருந்து இரத்தம் வருதல்.
தேவையான பொருட்கள்:
  1. அருகம்புல்.
  2. மாதுளை இலை.
செய்முறை:
கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் குறையும்.

மூக்கில் இரத்தம் வருவது குறைய - வெங்காயம். விளக்கெண்ணெய்.

வெங்காயம் 

அறிகுறிகள்:
  • மூக்கிலிருந்து இரத்தம் வருவது.
தேவையான பொருட்கள்:
  1. வெங்காயம்.
  2. விளக்கெண்ணெய்.
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோலை நீக்கி பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

மூக்கில் சதை வளர்தல் குறைய - சிற்றாமுட்டி வேர். சீந்தில் கொடி வில்வ வேர்.

சிற்றாமுட்டி   வேங்கை   வில்வ வேர்

அறிகுறிகள்:
  • மூக்கில் சதை வளர்தல்.
  • மூச்சி விடுவதற்கு சிரமமாக இருத்தல்.
  • தும்மல்.
  • சளி.
  • இருமல்
தேவையான பொருட்கள்:
  1. சிற்றாமுட்டி வேர்.
  2. சீந்தில் கொடி
  3. வில்வ வேர்.
  4. வேங்கை மரத்தின் வைரம்.
  5. அதிமதுரம்.
  6. கடுக்காய் தோல்
  7. சுக்கு.
  8. தான்றிக்காய் தோல்.
  9. நெல்லி முள்ளி.
  10. பசும் பால்.
  11. நல்லெண்ணெய்.
செய்முறை:
சிற்றாமுட்டி வேர், சீந்தில் கொடி, வில்வ வேர், வேங்கை மரத்தின் வைரம் ஆகியவற்றை நன்கு இடித்து மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி முக்கால் லிட்டராகச் சுண்ட வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதிமதுரம், கடுக்காய் தோல், சுக்கு, தான்றிக்காய் தோல், நெல்லி முள்ளி ஆகியவற்றை அரைத்து வடிக்கட்டிய காஷயத்துடன் கலந்து ஒரு லிட்டர் சுத்தமான பசுவின் பாலும்,  ஒரு லிட்டர் நல்லெண்யையும் அதனுடன் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். கஷாயம் மணல் பதத்திற்கு வந்ததும்  வடிகட்டி பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் மூக்கில் சதை வளர்தல், தும்மல், இருமல், காதுவலி, காதில் சீழ் வருதல் ஆகிய நோய்கள் குறையும்.
Flag Counter