யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label தும்மல். Show all posts
Showing posts with label தும்மல். Show all posts

Thursday, 28 March 2013

தும்மல் - அகத்திக்கீரை. அகத்திப்பூ. தேன்.

அகத்திப்பூ
அறிகுறிகள்:

  1. விடாமல் தும்மல்.
  2. காலையில் எழுந்தவுடன் தினமும் தும்மல்.
  3. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. அகத்திக்கீரை.
  2. அகத்திப்பூ.
  3. தேன்.
செய்முறை:

இரண்டு தேக்கரண்டி அகத்திகீரை சாறுடன் இரண்டு தேக்கரண்டி அகத்தி பூ சாறை கலந்து, அந்த கலவையுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை உணவருந்துவதற்கு முன் சாப்பிடவும்.

இடைவிடாத தும்மலுக்கு - சுக்கு. மிளகு. திப்பிலி

சுக்கு 
அறிகுறிகள்:
  1. அடிக்கடி தும்மல்.
தேவையானப் பொருள்கள்:
  1. சுக்கு.
  2. மிளகு.
  3. திப்பிலி
செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு சேர்த்து பொடியாக்கி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இடைவிடாத தும்மல் குணமாகும்.

தும்மல் நிற்க - தூதுவளை. மிளகு. தேன். பால்.

தூதுவளை
அறிகுறிகள்:
  1. தும்மல்.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளை.
  2. மிளகு.
  3. தேன்.
  4. பால்.
செய்முறை:
தூதுவளை பொடி, மிளகு பொடி, தேன் அல்லது பாலில் கலந்து குடிக்க  தும்மல் நிற்கும்.

தும்மல் குறைய - தூதுவளை. மிளகு. பால்.

தூதுவளை 
அறிகுறிகள்:
  1. தொடர்ச்சியான தும்மல்.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளை.
  2. மிளகு.
  3. பால்.
செய்முறை:
தூதுவளை இலையை நன்கு காய வைத்து மிளகையும் சேர்த்து நன்கு பொடியாக்கி அந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.

தும்மல் குறைய - சித்தரத்தை. பால்.

சித்தரத்தை 
அறிகுறிகள்:
  1. அடுக்கு தும்மல்.
தேவையான பொருட்கள்:
  1. சித்தரத்தை.
  2. பால்.
செய்முறை:
1 கிராம் சித்தரத்தை பொடியை அரை லிட்டர் பாலை கால் லிட்டர் பாலாக கட்டியாக காய்ச்சி 2 வேளை குடித்து வந்தால் தும்மல் குறையும்.

இடைவிடாத தும்மல் குணமாக - முசுமுசுக்கை இலை.

முசுமுசுக்கை
அறிகுறிகள்:
  1. அடிக்கடி தும்மல்.
தேவையானப் பொருள்கள்:
  1. முசுமுசுக்கை இலை.
செய்முறை:
முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைத்து தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட இடை விடாத தும்மல் குணமாகும்.

தும்மல் - நல்லெண்ணெய்.

நல்லெண்ணெய்
அறிகுறிகள்:
  1. தும்மல்.
  2. சளி.
தேவையான பொருள்கள்:
  1. நல்லெண்ணெய்.
செய்முறை:
தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் தும்மல் நின்று மூக்கில் தண்ணீர் வடிவது நிற்கும்.

தும்மல் குறைய - ஆடாதோடை. தூதுவளை. துளசி. தேன்.

தேன்
அறிகுறிகள்:
  1. விடாமல் தும்மல்.
  2. மூக்கடைப்பு.
தேவையான பொருட்கள்:
  1. ஆடாதோடை.
  2. தூதுவளை.
  3. துளசி.
  4. தேன்.
செய்முறை:
ஆடாதோடை இலை, தூதுவளை,  துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட  தும்மல்  குறையும்.

தும்மல் குறைய - துளசி. தூதுவளை. கண்டங்கத்திரி. தேன்.

துளசி
அறிகுறிகள்:
  1. தும்மல்.
தேவையான பொருட்கள்:
  1. துளசி.
  2. தூதுவளை.
  3. கண்டங்கத்திரி.
  4. தேன்.
செய்முறை:
துளசி, தூதுவளை, கண்டங்கத்திரி ஆகியவற்றின் இலை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் தும்மல் குறையும்.

தும்மல் குறைய - நல்லவேளை செடி.

நல்ல வேளை
அறிகுறிகள் :
  1. அடிக்கடி தும்மல்.
தேவையானா பொருட்கள் :
  1. நல்லவேளை செடி.
செய்முறை :
நல்லவேளை செடியின் சமூலத்தை எடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக் கட்டியெடுக்க  தும்மல்  குறையும்.

தும்மல் குறைய - பரட்டைக் கீரை. திப்பிலி. தேன்.

பரட்டைக் கீரை
அறிகுறிகள்:
  1. விடாத‌ தும்ம‌ல்.
தேவையானப் பொருட்கள்:
  1. பரட்டைக் கீரை.
  2. திப்பிலி.
  3. தேன்.
செய்முறை:
பரட்டைக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் நான்கு சிட்டிகை அளவு குழைத்துச் சாப்பிட்டால் தும்மல் குறையும்.

தும்மல் குறைய - ரோஜா இதழ். சீரகம்.

ரோஜாப்பூ மொட்டு
அறிகுறிகள்:
  • தும்மல்.
தேவையான பொருள்கள்:
  1. ரோஜா இதழ்.
  2. சீரகம்.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.

தும்மல் குறைய‌ - பப்ளிமாசு பழம்(grapefruit). எலுமிச்சை பழச்சாறு. தேன்.

பப்ளிமாசு பழம்
அறிகுறிகள்:
  • தும்மல்.
தேவையான பொருள்கள்:
  1. பப்ளிமாசு பழம்(grapefruit).
  2. எலுமிச்சை பழச்சாறு.
  3. தேன்.
செய்முறை:
பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.
Flag Counter