skip to main |
skip to sidebar
குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.
அறிகுறி:
- தீராத தலைவலி.
- பயணத்தின் போது தலைவலி.
- வேலையின் போது தலைவலி.
- சிந்தனையின் போது தலைவலி.
தேவையான பொருட்கள்:
- குப்பைமேனி இலை மற்றும் பூ – 1 கப்.
- தண்ணீர்.
செய்முறை:
குப்பைமேனியை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவவும்.
எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி போகும்.
அறிகுறிகள்:
- தீராத ஒற்றைத் தலைவலி
- விடாத தலைவலி.
தேவையான பொருட்கள்:
- எட்டி மரக்கொழுந்து.
- மிளகு
- பூண்டு.
செய்முறை:
- எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்
- தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
துளசி இலைகளை இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்)
இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருக புத்துணர்ச்சி ஏற்படும்.
அறிகுறிகள்:
- அதிக சோம்பல்.
- தளர்ச்சி.
தேவையான பொருட்கள்:
- துளசி இலை
- தண்ணீர்.
செய்முறை:
ஒரு கையளவு துளசி இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை எடுத்து லேசாக அரைத்த பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர சளித்தொல்லை குணமாகும்.
அறிகுறிகள்:
- மூச்சு விட முடியாமல் சோர்வு.
- சளி.
- இருமல்.
தேவையான பொருட்கள்:
- ஆடாதொடா இலை
- வெற்றிலை
- துளசி
- தூதுவளை
- தேன்
செய்முறை:
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து
லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து
சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து
தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை
முற்றிலும் குணமாகும்.
உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி நீங்கும்.
அறிகுறிகள்:
- ஒரு பக்கமாக வலித்தல்.
- தலை பாரமாக இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
- உப்பு
- மிளகு
செய்முறை:
உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.
மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி குறையும் .
அறிகுறிகள்:
- தலை வலித்தல்
தேவையானப் பொருள்கள்:
- மிளகு
- துளசி
செய்முறை:
மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .
கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
அறிகுறிகள்:
- தலை பாரமாக இருத்தல்
தேவையானப் பொருள்கள்:
- கொத்தமல்லி சாறு
செய்முறை:
கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
அறிகுறிகள்:
- தலை வலி.
- ஒற்றை தலை வலி.
தேவையானப் பொருள்கள்:
- நல்லெண்ணெய்
- தும்பை பூ
செய்முறை:
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
ஏலக்காய்களை நசுக்கி தண்ணீரில் போட்டு கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
அறிகுறிகள்:
- தலை சுற்றல்.
- மயக்கம்.
தேவையான பொருள்கள்:
- ஏலக்காய்
- பனைவெல்லம்
செய்முறை:
ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி
அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
ஜாதிக்காய் விதைகளை அரைத்து தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
அறிகுறிகள்:
- தலை வலி.
- ஒற்றை தலை வலி.
தேவையான பொருள்கள்:
- ஜாதிக்காய்
செய்முறை:
ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.
ஏலக்காய், கிராம்பு, வெற்றிலைக்காம்பு ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- ஒற்றை தலைவலி.
தேவையான பொருள்கள்:
- ஏலக்காய்
- கிராம்பு
- வெற்றிலைக்காம்பு
- பால்
செய்முறை:
ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.
இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து சேர்த்துக் காய்ச்சி தைலத்தை தலையில் தடவவும்.
அறிகுறிகள்:
- தலை வலி.
- ஒற்றை தலை வலி.
தேவையான பொருள்கள்:
- இஞ்சி
- நல்லெண்ணெய்
செய்முறை:
இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று
சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20
நிமிடம் வைத்திருந்து பின் குளிக்கவும்.
நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.
அறிகுறிகள்:
- தலை வலி.
- தலை குத்துதல்.
தேவையான பொருள்கள்:
- நெல்லிக்காய்
- குங்குமப்பூ
- ரோஜா நீர்
செய்முறை:
நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.
குங்குமப்பூவை அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- ஒற்றை தலைவலி.
தேவையான பொருட்கள்:
- குங்குமப்பூ
செய்முறை:
குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .
அறிகுறிகள்:
- தலைவலி
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சைப் பழம்
- மிளகு
செய்முறை:
எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .
இஞ்சி சாறு, தேன் கலந்து சாப்பிட தலைசுற்றல் குணமாகும்.
அறிகுறிகள்:
- தலைசுற்றல்
தேவையான பொருட்கள்:
- இஞ்சி
- தேன்
செய்முறை:
இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
துளசி, வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
அறிகுறிகள்:
- தலைபாரம்
தேவையான பொருட்கள்:
- வேப்பிலை
- துளசி
செய்முறை:
துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தடவினால் தலை வலி குறையும்.
அறிகுறிகள்:
- தலை வலி.
தேவையான பொருட்கள்:
- அகத்தி இலை
செய்முறை:
அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
தேவையான பொருட்கள்:
- கிராம்பு
- உப்பு
- பால்
செய்முறை:
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.
மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
அறிகுறிகள்:
- தலை வலி.
தேவையான பொருட்கள்:
- மிளகு
- பால்
செய்முறை:
மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.