யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label மூட்டு வலி. Show all posts
Showing posts with label மூட்டு வலி. Show all posts

Monday, 6 October 2014

மூட்டு வலி குறைய

கருநொச்சி இலை

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.
  • வாத வலி.

தேவையான பொருள்கள்:

  1. கருநொச்சி இலை.
  2. உப்பு.


செய்முறை:

கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.

Sunday, 5 October 2014

மூட்டு வலி குறைய

ரோஸ்மேரி இலை

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.


தேவையான பொருள்கள்:

  1. ரோஸ்மேரி இலை.


செய்முறை:

ரோஸ்மேரி இலைகளை அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

மூட்டுவலி குறைய

கல்தாமரை


அறிகுறிகள் :

  • மூட்டுவலி.

தேவையான பொருட்கள்:

  1. கல்தாமரை இலை (Smilax ovalifolia).

செய்முறை:

கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும்.

மூட்டு வலி குறைய

கல்யாண முருங்கை

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.


தேவையான பொருள்கள்:

  1. கல்யாண முருங்கை இலை.

செய்முறை:

கல்யாண முருங்கை இலைகளை வதக்கி மூட்டு மேல் கட்‌டி வந்தால் மூட்டு வலி குறையும்.

மூட்டு வீக்கம் குறைய

அமுக்கரா

அறிகுறிகள் :

  • மூட்டு வலி.
  • மூட்டு வீக்கம்.

தேவையானப் பொருட்கள்:

  1. அமுக்கரா இலை,வேர்.


செய்முறை :

அமுக்கரா இலை, வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பற்று போட மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.

மூட்டு வலி குறைய

அத்தி

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.

தேவையான பொருள்கள்:

  1. அத்தி.

செய்முறை:

அத்திப்பாலை சேகரித்து வலி காணும் இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

மூட்டு வலி குறைய

கடுகு எண்ணெய்

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.

தேவையான பொருட்கள்:

  1. கடுகு எண்ணெய்.
  2. விளக்கெண்ணெய்.
  3. கற்பூரம்.


செய்முறை:

கடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி குறையும்.

மூட்டுவ‌லி குறைய


அறிகுறிகள்:

  • மூட்டுவ‌லி.

தேவையான பொருட்கள்:

  1. அஸ்வகந்தா பொடி.
  2. பால்.

செய்முறை:

அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மில்லி பால் சேர்த்து 160 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் வற்றி பால் மட்டும் தங்கும் போது எடுத்து குடிக்க மூட்டுவ‌லி
க‌ட்டுப்ப‌டும்.

மூட்டு வலி குறைய



அறிகுறிகள்:

  • மூட்டு வலி.

தேவையான பொருட்கள்:

  1. பால்.
  2. மஞ்சள்.
  3. ஏலக்காய்.

செய்முறை:

சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

மூட்டுவலி குறைய



அறிகுறிகள்:

  • மூட்டுவலி.

தேவையான பொருட்கள்:

  1. கொன்றை மரப்பட்டை.


செய்முறை:

கொன்றை மரப்பட்டை கூழ் தினமும் 15 கிராம் அளவில் எடுத்து 1 மாதம் சாப்பிட‌ மூட்டுவலி குறையும்.

மூட்டுவலி குறைய




அறிகுறிகள்:

  • மூட்டுவலி.

தேவையான பொருட்கள்:

  1. நிலக்குமிழ் இலை.
  2. விளக்கெண்ணெய்


செய்முறை:
நிலக்குமிழ் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டுக்களின் மீது ஒத்தடம் கொடுக்க‌ மூட்டுவலி குறையும்.

மூட்டு வலி குறைய

மருதாணி இலை

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.

தேவையான பொருள்கள்:
  1. மருதாணி இலை.


செய்முறை:
மருதாணி இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும்.

மூட்டு வீக்கம் குறைய

ஆமணக்கு செடி

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.
  • மூட்டு வீக்கம்.


தேவையான பொருள்கள்:
  1. ஆமணக்கு வேர்.
  2. விளக்கெண்ணெய்.


செய்முறை:

ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து  நீர் முழுவதும் ஆவியாகி எண்ணெய் மட்டும் இருக்கும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்.

உபயோகிக்கும் முறை:


  • இந்த எண்ணெயை தினமும் குளிப்பதற்கு முன்னர் மூட்டுகளில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு குளியுங்கள். குளித்த பின்னர் இந்த எண்ணெயை மீண்டும் மூட்டுகளில் தேய்த்து மூட்டுகளை துணியால் நன்றாக கட்டி வைத்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்

மூட்டு வீக்கம் குறைய

கொய்யா இலை

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.
  • மூட்டு வீக்கம்.

தேவையான பொருள்கள்:

  1. கொய்யா இலை.

செய்முறை:

கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.

மூட்டு வீக்கம் குறைய

இஞ்சி 


அறிகுறிகள்:

  • மூட்டு வலி.
  • மூட்டு வீக்கம்.

தேவையான பொருள்கள்:

  1. இஞ்சி சாறு.
  2. நல்லெண்ணெய்.


செய்முறை:

250 கிராம் இஞ்சி சாறில், 150 கிராம் நல்லெண்ணெய் கலந்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக  அழுத்தி தேய்த்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறையும்.

மூட்டு வலி தைலம்

நல்லெண்ணெய்

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.

தேவையான பொருள்கள்:

  1. நல்லெண்ணெய்.
  2. வேப்பெண்ணெய்.
  3. கடுகு எண்ணெய்.
  4. நீரடிமுத்துக்கொட்டை எண்ணெய்.
  5. தேங்காய் எண்ணெய்.
  6. சுக்கு.
  7. மிளகு.
  8. இலுப்பை கொட்டை.
  9. அருகம்புல்.
  10. நொச்சி இலை.

செய்முறை:

  • 200 மி.லி நல்லெண்ணெயை ஒரு பானையில் ஊற்றி சிறிது சூடேறியதும் 200 மி.லி வேப்பெண்ணெயை ஊற்றி சிறிது சூடேற்றி பிறகு 200 மி.லி கடுகு எண்ணெயை ஊற்றி 1 நிமிடம் சூடேற்றி நீரடி 200 மி.லி முத்துக்கொட்டை எண்ணெயை ஊற்றி 2 நிமிடம் சூடேற்றி பின்பு 200 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் சூடேற்றி இறக்கி விடவும்.

  • 50 கிராம் சுக்கையும், 50 கிராம் மிளகையும் நன்றாக இடித்து கொள்ளவும். 100 கிராம் இலுப்பை கொட்டையை பச்சையாக கொண்டு வந்து இடித்து கொள்ளவும்.

  • 100 கிராம் அருகம்புல்லையும், 100 கிராம் நொச்சி இலைகளையும் பச்சையாக கொண்டு வந்து சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிற‌கு அனைத்தையும் தைல பானையில் போட்டு மீண்டும் சிறு தீயில் வைத்து சூடேற்றவும்.

தைல பதத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி தைலத்தை கண்ணாடி பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.


உபயோகிக்கும் முறை:
  • உடம்பில் வலியுள்ள இடத்தில் இந்த தைலத்தை பலமுறை நன்றாக தடவி அரப்பு தேய்த்து வெந்நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தலாம்.

மூட்டு வலி குறைய

துளசி பூ

அறிகுறிகள்:

  • மூட்டு வலி.

தேவையான பொருள்கள்:

  1. துளசி வேர், இலை, தண்டு, பூ, விதை.
  2. பழைய வெல்லம்.


செய்முறை:

துளசியின் வேர்கள், இலைகள், தண்டு, பூக்கள், விதைகள் ஆகிய துளசியின் 5 பாகங்களையும் எடுத்து இதற்கு சம அளவு பழைய வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்து வலியுள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.

மூட்டு வீக்கம் குறைய

எருக்கன் இலை

அறிகுறிகள்:

  • மூட்டு வீக்கம்.

தேவையான பொருள்கள்:

  1. எருக்கன் இலை.


செய்முறை:

எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி  மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்

மூட்டுவலி குறைய

பூண்டு இலை

அறிகுறிகள்:

  • மூட்டுவலி.


தேவையான பொருட்கள்:
  1. பூண்டு இலை.
  2. வேப்ப எண்ணெய்.


செய்முறை:
பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

மூட்டுவலி குறைய

கணப்பூண்டு இலை

அறிகுறிகள்:

  • மூட்டுவலி.


தேவையான பொருட்கள்:

  1. கணப்பூண்டு இலை
  2. வேப்ப எண்ணெய்.


செய்முறை:

கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

Flag Counter