யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label வாய்ப்புண். Show all posts
Showing posts with label வாய்ப்புண். Show all posts

Saturday, 23 February 2013

வாய் புண் குறைய‌ - அரசமரபாட்டை மற்றும் இலை

அரசமரபாட்டை மற்றும் இலை
அறிகுறிகள்:
  1. உணவை உண்ணும் போது எரிச்சல்
  2. வாய் மற்றும் உதட்டில் புண்
தேவையான பொருள்கள்:
  1. குடிநீர்
  2. அரசமர பட்டை
செய்முறை :
 
அரசம் பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி தினமும் காலை மாலை இரண்டு நேரமும் வாய் கொப்பளிக்கவும்

உதடு சம்பந்தமான நோய் - அத்திக்காய்

அத்திக்காய்
அறிகுறிகள்:
  1. தீராத வாய்ப்புண்
  2. வாயை மெல்லும்போது வலிக்கும்.
  3. உதட்டின் வீக்கம்.
  4. உலர்ந்த உதடு.
தேவையான பொருட்கள்:
  1. அத்திக்காய்
செய்முறை:

அத்திக்காயை தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் உதடு புண் குணமாகும்.

நாக்கில் புண் - அகத்தி இலை

அகத்தி இலை
அறிகுறிகள்:
  1. தீராத வாய்ப்புண்
  2. வாயை மெல்லும்போது வலிக்கும்.
  3. சாப்பிடும் போது வாய் வலிக்கும்.
தேவையான பொருட்கள்:
  1. அகத்தி இலை
  2. தண்ணீர்
செய்முறை:
  1. அகத்தி இலையை முதலில் அலச வேண்டும்.
  2. 2 கப் தண்ணீருடன் அகத்தி இலையை கொதிக்க வைக்க வேண்டும்.
  3. கொதிக்க வைத்த சாரை வடிகட்ட வேண்டும்.
  4. அந்த சாரை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கில் புண் குணமாகும்.

வாய்ப்புண் - தேன் , தேங்காய்ப்பால்

தேன்
அறிகுறிகள்:
  1. வாய் எரிச்சல்.
  2. வாய் வறண்டு போதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. தேன்
  2. தேங்காய்ப்பால்

செய்முறை:


தேனுடன்  தேங்காய்ப்பால் கலந்து  குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.

வாய்ப்புண் போக - கசகசா , பசும்பால்

கசகசா 

அறிகுறிகள்:
  1. வாய் காந்துதல்
தேவையானப் பொருள்கள்:
  1. கசகசா
  2. பசும்பால்
செய்முறை:

கசகசாவை தூளாக்கி பசும்பாலில் கலந்து இரவு குடிக்கவும்.

வாய்ப்புண் நீங்க - அத்திப் பழம்

அத்திப் பழம் 

அறிகுறிகள்:
  1. வாய் வறண்டு போதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. அத்திப் பழம்
செய்முறை:

அத்திப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

வாய் துர்நாற்றம் நீங்க - எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம் 

அறிகுறிகள்:
  1. வாய் துர்நாற்றம்
தேவையானப் பொருள்கள்:
  1. எலுமிச்சை பழம்
செய்முறை:

எலுமிச்சை பழச்சாறை தண்­ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய்ப்புண்ணிலிருந்து விடுபட - பப்பாளி

பப்பாளி
அறிகுறிகள்:
  1. வாய் புண்.
  2. வாய் எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. பப்பாளி
செய்முறை:

பப்பாளிப் பழம் சாப்பிட வாய்ப்புண் ஆறிவிடும்.

வாய்ப்புண் மறைய - கொப்பரை தேங்காய் , கசகசா,பால்

கசகசா
அறிகுறிகள்:
  1. வாய் வறண்டு போதல்.
  2. வாய்ப்புண்.
  3. வாய் எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. கொப்பரை தேங்காய்
  2. கசகசா
  3. பால்
செய்முறை:

ஒரு துண்டு கொப்பரை தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டையும் ஒன்றாக சேர்த்தரைத்து, ஒரு தம்ளர் பசும்பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து ஆறின பிறகு தடவி வந்தால் வாய்ப்புண் மறைந்து போகும்.

வாய்ப்புண் ஆற - தேங்காய்

தேங்காய்
அறிகுறிகள்:
  1. வாய்ப்புண் .
  2. வாய் வறண்டு இருத்தல்.
தேவையான பொருள்கள்:
  1. தேங்காய்.
செய்முறை:

வாய்ப்புண் உள்ளவர்கள் தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாய்ப்புண் குணமாக - மணத்தக்காளி

மணத்தக்காளி
அறிகுறிகள்:
  1. வாய்ப்புண்.
  2. வாய் எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. மணத்தக்காளி
செய்முறை:

மணத்தக்காளியை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

வாய்ப்புண் குணமாக - அகத்திக் கீரை , மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளிக் கீரை
அறிகுறிகள்:
  1. வாய்ப்புண்
தேவையான பொருட்கள்:
  1. அகத்திக் கீரை
  2. மணத்தக்காளிக் கீரை
செய்முறை:

அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரையை சமைத்து  சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

வாய் நாற்றம் குணமாக- ரோஜா இதழ்கள் , கரும்புச் சாறு

கரும்புச் சாறு
அறிகுறிகள்:
  1. வாய் நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. கரும்புச் சாறு
  2. ரோஜா இதழ்கள்
செய்முறை:

கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.

வாய் நாற்றம் குணமாக - வேப்பலை , உப்பு

உப்பு
அறிகுறிகள்:
  1. வாய் நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. வேப்பலை
  2. உப்பு
செய்முறை:

வேப்பலை, உப்பையும் வறுத்து பொடி செய்து தினமும் பல் துலக்கினால் வாய் நாற்றம் குறையும்.

வாய் கசப்பை நீக்க- எலுமிச்சை , இஞ்சி

இஞ்சி
அறிகுறிகள்:
  1. வாய் கசப்பு.
தேவையான பொருட்கள்:
  1. எலுமிச்சை
  2. இஞ்சி
செய்முறை:

எலுமிச்சை சாற்றில் இஞ்சியை ஊற வைத்து தினமும் அதை மென்று சாப்பிட்டு வர  வாய் கசப்பு நீங்கும்

வாய்ப் புண் குறைய - ரோஜா இதழ்கள்

ரோஜா இதழ்கள்
அறிகுறிகள் :
  1. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள் :
  1. ரோஜா இதழ்கள்.
செய்முறை :

ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.

வாய்ப் புண் குறைய- தேங்காய் பால்

தேங்காய் பால்
அறிகுறிகள் :
  1. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள் :
  1. தேங்காய் பால்
செய்முறை :

தேங்காய் பாலைக்  கொப்பளிக்க வாய்ப்புண் மாறும்.

நாக்கு புண் குறைய- நெல்லி , தேன்

தேன்
அறிகுறிகள் :
  1. நாக்கு புண்.
தேவையான பொருட்கள் :
  1. நெல்லி வேர்பட்டை
  2. தேன்
செய்முறை :

நெல்லி வேர்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண் குறையும்.

வாய்ப்புண் குறைய- பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் 

அறிகுறிகள்:
  1. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. பெருஞ்சீரகம்
செய்முறை:

பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட வாய்ப்புண் குறையும்.

வாய் கசப்பு நீங்க - விளாம்பழம்

விளாம்பழம் 

அறிகுறிகள்:
  1. வாய் கசப்பு.
தேவையான பொருட்கள்:
  1. விளாம்பழம்
செய்முறை:

விளாம்பழம் தினமும் சாப்பிட வாய் கசப்பு குறையும்.
Flag Counter